நட்பே உன் விலை என்ன எனில்

என்று நண்பன் ஒருவன்
தன நண்பனிடம்," நண்பா
உன் நட்பின் விலை என்னவோ"
நான் அறியலாமா என்று கேட்பானாயின்
அவன் நண்பனும் நட்பும்
அக்கணமே மறைந்து போய்விடுவார்
இருள் வந்து அணைக்க
ஒளி மறந்துவிடுவது போல் ,
அசுத்தம் புகுந்த வீட்டிலிருந்து
அலைமகள் மறைவது போல் ;
ஏனெனில் நட்பை விலைபோட நினைப்பவன்
வியாபாரி, நண்பன் அல்லன்.

நட்பென்பது விலைகொடுத்து
வாங்க முடியாத அரும்பொருள்
அது தானாய் வந்தமையும்
அருங்குணம் தியாகிகளின்
ஆபரணம்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Mar-17, 4:38 pm)
பார்வை : 400

மேலே