இளைஞர்களின் உள்ளத்தில் வாழும் இறையன்பு அவர்கள் கவிஞர் இரா இரவி
இளைஞர்களின் உள்ளத்தில் வாழும் இறையன்பு அவர்கள் ! கவிஞர் இரா .இரவி !
மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக இளைஞர்கள் அதிகம் நேசிக்கும் மாமனிதர் இறையன்பு நூற்றி என்பது நூல்களின் மூலமும் , பல எழுச்சி உரைகளின் மூலமும் இலச்சக்கணக்கான வாசகர்களின் உள்ளத்தில் நேர்மையை ,ஒழுக்கத்தை ,அறநெறியை ,நற்குணத்தை ,கல்வியை ஓய்வின்றி விதைத்து வருகிறார் .இவரின் அறிவுரையால் I.A.S தேர்வும் ,I.P.S.தேர்வும் வென்றவர்கள் பலர் .பல ஆயிரம் பேரின் நல் மாற்றத்திற்கு காரணமாக உள்ளார்
பதச் சோறாக மூன்று மட்டும் குறிப்பிடுகிறேன் . இறையன்பு கருவூலம் நூல் படித்து விட்டு என்னுடன் கோப்பெருஞ் சோழன் பிசிராந்தையார் போல பல ஆண்டுகள் நேரில் சந்திக்காமலே அலைபேசி மூலமே நட்பாகி தினமும் எனது ஹைக்கூ கவிதையை வடிவமைத்து பொருத்தமான படங்கள் வைத்து அனுப்புவார் .அவற்றை தொகுத்து "ஹைக்கூ விருந்து" என்று நூலாக்கினேன் அண்மையில் நேரில் சந்திக்க இல்லம் வந்தார் .அப்போது சொன்னார் நம்மை இணைத்து இறையன்பு அய்யாதான் .
அவரிடம் பேசியது இல்லை அவரது நூல்கள் படித்து 12 வருடங்களாக சைவம் ஆகி விட்டேன் .அசைவம் உண்பதில்லை .உடல் நலத்துடன் இருக்கிறேன் .மருத்துவர்களும் சைவமே நன்று என்கின்றனர் .என்றார் .வியந்துபோனேன் நான் இப்போதுதான் சைவத்திற்கு மாறி உள்ளேன் .மறுத்தவர் கண்டிப்பாக சொன்னதால் .
.இனிய நண்பர் நா . பார்த்தசாரதி பனி நிறைவிற்குப்பின் திருமங்கலத்தில் பகத்சிங் தெருவில் உள்ள தனது இல்லத்தையே இறையன்பு பொது நூலகமாக்கி பக்கத்து கிராமங்களிலும் "இறையன்பு கிளை நூலகங்கள் "தொடங்கி போட்டித்தேர்வு மாணவர்களுக்கு இலவச பயிற்சியும், உணவும் அளித்து வருகிறார் .இறையன்பு அவர்களின் தலைமை சீடர் என்றே சொல்ல வேண்டும் .அவரது நூல்கள் படித்து தொண்டுள்ளம் பெற்றவர் .இறையன்பு அய்யா சில ஆண்டுகளாக வண்ண சட்டை அணிவதில்லை .வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார் .அவரைப்போலவே பார்த்தசாரதி அவர்களும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்.
நான் இறையன்பு அய்யாவின் ஒற்றை வரியை " எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் ." எனபதை தாரக மந்திரமாகக் கொண்டு என் உடலும், மனமும் சோர்வு அடையும்போதெல்லாம் இந்த வரிகள் நினைவிற்கு வந்துவிடும் .உடலும் ,உள்ளமும் புத்துணர்வு பெற்று விடும். 34 THநூல்கள் எழுதிவிட்டேன் .என்னுடைய வெற்றிக்கு இறையன்பு அய்யாவின் நூல்களும் உரைகளும் காரணம் என்றால் மிகையன்று .
இப்படி பல்லாயிரம் பேரின் வாழ்வில் நல் மாற்றங்கள் விதைத்து வரும் அய்யா வாழ்க பல்லாண்டு .