கவிஞர் இராஇரவியின திரும்பிப்பார்க்கிறேன் நூல் கவிஞர் கண்ணன்சேகர், ஆசிரியர் கவியரசு, கவிச்சூரியன் மின்னிதழ்கள்

கவிஞர் இரா.இரவியின திரும்பிப்பார்க்கிறேன் நூல்

கவிஞர் இரா.இரவி எழுதிய 33வது நூல் “திரும்பிப் பார்க்கிறேன்” என்ற நூலாகும். இவர் சுற்றுலாத்துறையில் பணியாற்றியப் போது சந்தித்த முக்கியப் பிரமுகர்களுடன் அப்போது ஏற்பட்ட நட்பார்ந்த அனுபவ தொகுப்பே இந்த நூலின் வடிவமாகும்.

பூமியில் வாழ்ந்த புனிதர், உலகமே போற்றிய மாமனிதர் உயர்திரு அப்துல்கலாம் ஐயாவின் சந்திப்பு வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, அவரை சந்திக்க இரா.இரவி அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சம்பவங்களைப் படித்து வியப்படைந்தேன்..

அதேபோல முதுமுனைவர் வெ.இறையன்பு இஆ.ப, அவர்களின் நட்பு சுற்றுலாத்துறை பணியாற்றிய போது இரவிக்கு கிடைத்திருக்கிறது. ஒருத்துறையில் அரசின் நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதே முக்கியமானது. சில விடயங்களில் ஒருசில அதிகாரிகள் ஒத்துப்போவதில்லை. இப்படிப்பட்ட சூழலில் மௌனமாகத்தான் போகவேண்டும். இப்படியான ஒருசூழலில் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களிடம் கூறி நல்லதொரு நடவடிக்கையை எடுத்த கவிஞர் இரா.இரவியின் செயல்பாடு பராட்டுக்குரியது. இப்படி மதுரை மீனாட்சியம்மன் கோயில் சம்பவம் உதாரணமாக குறிப்பிட்டதின் மூலம் அறிய முடிகிறது.

‘பட்டிமன்ற பகலவன்’ பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா நட்பினைப் பெற்ற விதம் சிறப்புக்குரியது. மதுரையில் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் பாப்பையா ஹைக்கூ இரவி வந்திருக்கிறார் என்பதை ஒவ்வொரு முறையும் கூறிவருகிறார். அவரின் இதயத்தில் குடிக்கொண்டுள்ள நண்பர்களில் இரவியும் ஒருவராக இருக்கிறார் என்பதை இதுக் காட்டுகிறது.

புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பாராட்டைப் பெற்ற இரவி அவர்களுக்கு தொலைபேசி மூலம் சிலமுறை பேசியிருப்பது மிகச்சிறப்பு. இரவி அவர்கள், மாயாண்டிக் குடும்பத்தர் என்ற திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதி அது தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ளது. அந்த விமர்சனத்தை பார்த்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தொலைப்பேசியில் பாராட்டியிருக்கிறார். பின்னர் ஜெயா டிவியின் சிறப்பு நேர்காணல் செய்திருப்பது பாராட்டுக்குரியது.

புரட்சித்தமிழன் இனமுரசு நடிகர் சத்தியராஜ் அவர்களின் நட்பை பெற்ற இரவி அவர்கள் பல்லாண்டு காலமாக நண்பராக இருந்து வருவது நல்ல நட்பின் அடையாளம் என்றே சொல்லலாம். இப்படி நீதித்துறை, கல்வித்துறை, திரைத்துறை என பன்முகத்துறை 46 பிரமுகர்களின் நட்பினை பெற்றுள்ள இரவி அவர்களை திரும்பிப் பார்க்கிறேன் நூல் நல்ல அடையாளம் காட்டுகிறது. நட்புறவின் நாயகன் இரவி அவர்களைப் பாராட்டி மகிழ்வோம்.

கவிஞர் கண்ணன்சேகர், ஆசிரியர்

கவியரசு, கவிச்சூரியன் மின்னிதழ்கள்

திமிரி-632512. இராணிப்பேட்டை மாவட்டம்

9894976159. 9698890108.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (14-May-25, 6:37 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 4

மேலே