கவிஞர் இராஇரவியின திரைச்சுவடுகள்கவிஞர் கண்ணன்சேகர், ஆசிரியர் கவியரசு, கவிச்சூரியன் மின்னிதழ்கள்

கவிஞர் இரா.இரவியின திரைச்சுவடுகள்

கவிஞர் இரா.இரவி அவர்கள் பார்த்த திரைப்படங்களைப் பற்றி அவ்வப்போது அந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அனுப்பிய விமர்சனங்களின் தொகுப்பே திரைச்சுவடுகள் என்னும் நூலாகும். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் விமர்சனங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. கவிஞர் இரவி அவர்கள் குறிப்பிட்டுள்ள படங்களின் பெயரை படித்தப் பிறகுதான், இந்த பெயர்களிலும் படங்கள் வந்திருப்பதை அறிந்துக் கொண்டேன்.

கவிஞர் இரா.இரவி குறிப்பிட்ட அத்தனை திரைப்படங்களில் பசங்க, ஒருகல் ஒரு கண்ணாடி, மஞ்சாப்பை ஆகிய மூன்று படங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். மஞ்சாப்பை படம் ஒரு முதியவராக ராஜ்கிரண் நடிப்பு அருமை. பல வீடுகளில் இன்று தாத்தா, பாட்டியை மதிப்பதேயில்லை. காரணம் எல்லாம் எனக்குத் தெரியும் என்ற இளையத் தலைமுறையின் அலட்சியம்தான். இதனை, கவிஞர் இரா.இரவி அருமையாகவும் அழுத்தமாகவும் பதிவிட்டுள்ளார்.

தற்போது வரும் சில திரைப்படங்களில் ஆபாசக்காட்சிகள் இருக்கவே செய்கிறது. ஆனால் பசங்க என்ற படம் முழுக்க முழுக்க ஆபாசம் இல்லாத திரைப்படம். பசங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. எனவும் இதுபோன்ற பசங்களுக்கு அறிவுரை தரும் படங்கள் நிறைய வர வேண்டும் என கவிஞர் இரா.இரவியின் எண்ணம் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்களை கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு கூறுவோம்.

கவிஞர் கண்ணன்சேகர், ஆசிரியர்

கவியரசு, கவிச்சூரியன் மின்னிதழ்கள்

திமிரி-632512. இராணிப்பேட்டை மாவட்டம்

9894976159. 9698890108.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (14-May-25, 6:54 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 14

மேலே