நூல் திரும்பிப்பார்க்கிறேன் நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் திருமதி இர ஜெயப்பிரியங்கா

நூல் : திரும்பிப்பார்க்கிறேன்
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : திருமதி. இர. ஜெயப்பிரியங்கா



வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீனதாளு தெரு,
தி. நகர், சென்னை – 17.
விலை : 70 பக்கங்கள் : 78




ஐயா அவர்கள் எனக்கு குரு. அவரின் 33-ஆவது நூல் திரும்பிப்பார்க்கிறேன். இந்நூலுக்கு மதிப்புரை எழுதுவதில் மட்டட்ற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஐயா அவர்கள் இலக்கிய ஆளுமைகள் நண்பர்கள் என 46 ஆளுமைகளை நூலில் பதிவு செய்கிறார்.
இந்நூலின் முன் அட்டை படத்தில் ஆளுமைகளின் புகைப்படமும் பின் அட்டை படத்தில் கவிதை உறவு ஆசிரியர் ஏர்வாடியார் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றுள்ளது. இனி நூலிற்குள் செல்வோம்.
நூலின் அணிந்துரை கவிதை உறவு ஆசிரியரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐயா அவர்கள் சுற்றுலா துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பணியின் போது தனது உயர் அதிகாரிகளும், இலக்கிய ஆளுமைகளுடனும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முன் இரத்தி சுருக்கமாக நூல் வழி பகிர்ந்துள்ளார்.
நூலின் சில நிகழ்வுகள்
முதுமுனைவர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்
புத்தகத் திருவிழாவில் உரையாற்றுவதற்குப் பணம் பெறாமலே இலவசமாக பேசி வருகிறார். இக்காலத்தில் இப்படி மனிதர் காண்பது அரிது.
சேதுபதி மேல்நிலைப் பள்ளி
+1 வகுப்பிற்கு இடம்தராத பள்ளியில் பின் நாளின் சிறப்பு விருந்தினராக ஐயா அவர்கள் சென்றது. அவரின் கடின உழைப்பைக் காட்டுகிறது.
செனாய்நகர் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி
+2வில் கடினமாக படித்து 857 மதிப்பெண் ஐயா அவர்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பள்ளிக்கு பெரிய கட்டிடங்களைக் கட்டிக்கொடுத்த சிவ்நாடார் செயல் குறிப்பிடத்தக்கது. இன்றைய காலத்தில் செய்த சிறு உதவிக்குச் சாலையை மறித்து பேனர், கட்அவுட் வைப்பவர்கள் மத்தியில் இவர் சிறந்த மனிதர்.
மன்னர் திருமலைநாயக்கர் அரண்மனை
திரைப்படபிடிப்பை உரிய நேரத்திற்குள் முடிக்கச் செய்து பொது மக்களுக்கு ஒலிஒளி காட்சி நடத்த ஏற்பாடு செய்த ஐயா அவர்களின் நேர்மை இங்கு குறிப்பிடத்தக்கது.
அ.வ. செல்லையா அவர்கள்
ஐயா அவர்கள் விடுதலை போராட்ட வீரர் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிமாமணி சி. வீரபாண்டிய தென்னவன்
தென்னவன் ஐயா கவியரங்கம் நடத்துகிறார் என அலைபேசி வழி பார்த்தபோது உடனே நான் ரவி ஐயாவின் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டேன் உடனே தென்னவன் ஐயா எண் கொடுத்து உதவினார்கள். வீரபாண்டிய தென்னவன் ஐயா தன் சொந்த செலவில் என்னைப் போன்ற வளரும் கவிஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி கவியரங்கம் மாதாமாதம் நடத்தி கவிபாட வாய்ப்புகள் வழங்கினார். கொரோனா காலத்தில் இறந்துவிட்டார். வருந்தத்தக்கது.
பி. வரதராசன், பெரியார் நெறியாளர்
வடக்குமாசி வீதியில் தனக்கு சொந்தமான மணியம்மை மழலையர் பள்ளியை மாலைநேரம் மற்றும் விடுமுறை நாட்களில் இலக்கியக் கூட்டம் நடைபெற இலவசமாக வழங்கிவருபவர் 115முறை குருதிக்கொடை வழங்கி சாதனை புரிந்தவர்.
கார்த்திகேயன் மணிமொழியன்
உலகத்திருக்குறள் பேரவை மதிப்புறு தலைவர் மாதந்தோறும் திருக்குறள் தொடர்பான கவியரங்கம், கருத்தரங்கம் நடத்தி விருந்தினருக்கு உணவு தேநீர் வழங்கி வருகிறார்.
அகவிழி பார்வையற்றோர் விடுதி
முகநூல், வலைப்பூவில் பார்த்திருகிறேன் ஐயா மஅவர்கள் தனது பிறந்தநாள், தன் பிள்ளைகளின் பிறந்தநாள் திருமணநாள் முன்னிட்டு விடுதிக்குப் பணம் மளிகைபொருட்கள் இனிப்பு கொடுத்து மகிழ்வார்.
முனைவர் ஞா. சந்திரன்
ஐயா மஅவர்களின் நீண்டகால நண்பர் தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியர், தன்னம்பிக்கைப் பேச்சாளர். மதுரையின் அனைத்து இலக்கிய நிகழ்வுகளிலும் ஐயாவுடன் இனிதே நட்புடன் பயணிப்பவர். இவரும் தன்னம்பிக்கை தொடர்புடைய நூல் பல எழுதியுள்ளார். பல்வேறு சூழ்நிலைகளிலும் ஐயாவுடன் இலக்கிய நட்புடன் நடைபயிலும் பல்வேறு ஆளுமைகளைப் பற்றியும் அவர்களின் உயர்குணம் பற்றியும் நூல் முழுவதும் நிரம்பி வழிகிறது. ‘‘நினைவுகளைப் பின்னோக்கி அசைபோட வைத்த இனிய நூல் ‘திரும்பிப்பார்கிறேன்’.’’

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (14-May-25, 10:09 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 45

சிறந்த கட்டுரைகள்

மேலே