துர்னாப்
வகுப்பறையில்:
ஐயா, இவன் என்ன 'துர்னாப், துர்னாப்'னு
கிண்டல் பண்ண்றானுங்க ஐயா.
@@@@@
ஏண்டா அறிவழகா 'அர்னாப்'பைத்
துர்னாப்னு கிண்டல் பண்ண்ற?
@@@@@@
ஐயா, அந்த அர்னாப் எப்ப பாத்தாலும்
பச்சை, பச்சையா கெட்ட வார்த்தைகளைப்
பேசறாணுங்க ஐயா. என்னால அதை
சகிக்க முடியல. கெட்ட வார்த்தைகளைப்
பேசியே வகுப்பில் உள்ள மாணவர்களை
எல்லாம் கெடுத்துடுவான் ஐயா.
@@@@@
ஏண்டா அர்னாப் கெட்ட வார்த்தை
பேசினாயா?
@@@@@@
கெட்ட வார்த்தையா? ஐயா நான் கனவில்
கூட கெட்ட வார்த்தை பேசமாட்டேனுங்க
ஐயா
@@@@@@@
(நான்கு மாணவர்கள் எழுந்து): ஐயா,
இவன் பொய் சொல்லறான். இவன்
எப்பவுமே கெட்ட வார்த்தைகளைப்
பேசிட்டே இருப்பான். கண்டிச்சுக
கேக்க்றவங்களை அடிப்பான் ஐயா.
@@@@@@@@
ஐயா, நான் தெரியாம என்னையே மறந்து
கெட்ட வார்த்தை பேசியிருப்பேன். என்னை
மன்னிச்சிருங்க ஐயா.
@@@@@@@
உன்னை எத்தனை தடவை மன்னிக்கிறது.
நீ வீட்டுக்குப் போய் உன்னோட அம்மா
அப்பாவை அழைச்சிட்டு வா.
@@@@@@
(வெளியே புத்தகப் பையை எடுத்துக்
கொண்டு ஓடிட்டே அர்னாப்): போடா
வாத்திப் பையா. .....தா. இனிமே பள்ளிக்கு
வந்தாத் தானா. வெளியே வா. மண்டைய
ஒடச்சுட்றேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆசிரியர்களின் மண்டையை உடைத்த
மாணவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
******************************************************
Arnab = meaningless masculine name.