துரை பாப்பாத்தி-காந்தி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : துரை பாப்பாத்தி-காந்தி |
இடம் | : Dharmapuri |
பிறந்த தேதி | : 22-Mar-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 967 |
புள்ளி | : 523 |
வளைவுகள் அதிகம் குறுகிய பாதையில்...
கடந்து செல்லும் தோற்றம்...
தனிமைக்கு கனவு என்று பேரு...
அங்கு இனிமைகள் பல ஊர்கள் வேறு...
ஆடையில்லா குழந்தையாக ...
அதன் அழுகையே சிரிப்பாக கூடும்...
எவ்வாறு சொல்வது
என் கால் பதித்த
கல்லூரி வாசலில்
முகவரி தந்த நட்பின்
முன்னுரையை சொல்லவா
அன்னை , தந்தை யின் பிரிவு
மீண்டும் உன் மூலம்
கிடைத்ததை சொல்லவா
அவர்களிடம்மும் கூட சொல்ல முடியா
சில உணர்வுகளை
உன்னிடம் பகிர்ந்ததை சொல்லவா
அவர்களிடமும் கூட கிடைக்க பெறாத
சந்தோசம் உன்னிடம்
கிடைத்ததே அதை சொல்லவா
கல்லூரியின் வறண்டாவில்
மணி கணக்கில் அரட்டை
அடித்ததை சொல்லவா
அது உன் ஆள்
இது என் ஆள்
என்று நமக்குள்ளே போட்ட
ஒப்பந்தத்தை சொல்லவா
அவன் உன்னை பார்கிறாண்டி
உன்னை பார்த்து ரொம்ப வலிராண்டி
உன் ஆள் வந்துட்டாண்டி
என்று தினம் தினம் முழங்கியதை சொல்லவா
தே
இன்றோ ஆறுதல் சொல்ல ஆயிரம் பேர்
அன்று அவள் போராடிய போது
வேடிக்கை பார்த்த நாம்
இன்றோ ஆறுதல் சொல்ல ஆயிரம் பேர்
முகம் தெரியாதவர்கள் எல்லாம்
இன்று அவள் வீட்டின் முன்
ஆறுதல் சொல்லவா..?
இல்லை நானும் துக்கத்தில் பங்கேற்று கொண்டுவிட்டேன்
என்பதை மீடியாக்களில் தெரிய படுத்தவா..?
யாருக்கு வேண்டும் உங்கள் துக்க விசாரணை
அவள் கண்ணீர் சிந்திய போது
துடைக்க யாரும் இல்லை அன்று ,
இன்றோ கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
ஒட்ட ஆயிரம் பேர்
எந்த மீடியாவும் இவளுக்காக
முன்வரவில்லை
எந்த அரசியல் வாதியும்
இவளுக்கு ஆதரவாக பேசவும் இல்லை
எந்த சினிமா நடிகரும் இவளுக்கு
குரல் கொடுக்கவும் இல்லை
மூச்சு உள்ள வரை
எனக்காக நேசிப்பவன்
எனக்காகவே சுவாசிப்பவன்
என் தந்தை எனக்கு நண்பன்
என் தாய் என்னை
பத்து மாதம்
கருவறையில் சுமந்தாலும்
என் கைவிரல்களை
முதன் முதலில்
கரம் பிடித்தவன்
என் தந்தை
முட்ட முட்ட கண் விழிகளை கண்டு
முதல் முத்தத்தை
பதிய வைத்தவன்
என் தந்தை
பொட்ட பிள்ளையா
என் ஊரே சினிங்கிடும் வேளையில்
ஆமாம் பொட்ட பிள்ளைதான்
என்னை பெத்து எடுத்த பிள்ளை
அவ என் ஆத்தா
என் குல சாமி
செல்லம் ,என் தங்கம்
நீ வா வா
அவங்க கடக்கிறாங்க பிக்காலி பசங்க
என எனக்காக வாய்மொழித்தவன்
என் தந்தை
என் அம்மாவின் மார்பில்
பால் குடித்த நேரத்தை விட
என் தந்தையின்
என் வாழ்க்கை
முன்னுரையாக இருந்தாலும் சரி
அதில் தோன்றும்
முதல் வார்த்தை
"நீயாக" தான்
இருப்பாய் ..,
என் வாழ்க்கை
முன்னுரையாக இருந்தாலும் சரி
அதில் தோன்றும்
முதல் வார்த்தை
"நீயாக" தான்
இருப்பாய் ..,
வலி நிறைந்த சுகம் தான் காதல் .,
அந்த சுகமான வலியோடு பயணித்த
போது தெரிய வில்லை எனக்கு ,
நீ என்னை விட்டு செல்வாய் என்று!!!
ஆனால் நீ விலகிய பின்பு தான் உணர்ந்தேன்
எந்தன் மரணத்தின் வலி என்னவென்று !!!
உன் நினைவுகளை என்னுடன் செதுக்கி
வைப்பேன் எந்தன் உயிர் கல்லறை செல்லும் வரை!!!
காற்றோடு இசைபாடும்
கண்கள் அங்கு நடைபோடும்
வேற்று கிரகத்தில் வெளிச்சங்கள் பிறக்கும்
அதில் நம் நினைவுகள் கடைபோடும்
அர்த்தம் முள்ள வார்த்தைகள் எல்லாம்
வரிசை கட்டி நிற்க
அர்த்தமாகி போகிறது
பேச தெரியாத நம் மௌனங்கள்
பூமிக்கும் ஒரு அடையாளம் உண்டு
அதை தூரத்தில் இருந்து பார்த்தால் தெரியும்
நமக்கும் ஒரு அடையாளம் உண்டு
அதை தூரத்தில் இருந்து பார்க்க தேவையில்லை
நம்மோடு இருக்கிறது
நமக்காகவே பிறந்து இருக்கிறது
அது நம்மோட புரிதல்லாகவே வாழ்கிறது
முகத்தில் தெரியும் அழகு
அது முன்னுரை வரை மட்டும்தான்
அழகு படுத்தும்
அகத்தில் இருக்கும் அழகுதான்
பொருள்வுரையான நம் வாழ்க்க
உலகில்
உன் முகவரியை
நீ தேடி தேடி அலைந்தாலும்
உன் கல்லறையின் முகவரியை
வேர் ஒருவரால் எழுதப்படுகிறது