தெளிவு படுத்தும் காதல்

காற்றோடு இசைபாடும்
கண்கள் அங்கு நடைபோடும்
வேற்று கிரகத்தில் வெளிச்சங்கள் பிறக்கும்
அதில் நம் நினைவுகள் கடைபோடும்

அர்த்தம் முள்ள வார்த்தைகள் எல்லாம்
வரிசை கட்டி நிற்க
அர்த்தமாகி போகிறது
பேச தெரியாத நம் மௌனங்கள்

பூமிக்கும் ஒரு அடையாளம் உண்டு
அதை தூரத்தில் இருந்து பார்த்தால் தெரியும்
நமக்கும் ஒரு அடையாளம் உண்டு
அதை தூரத்தில் இருந்து பார்க்க தேவையில்லை
நம்மோடு இருக்கிறது
நமக்காகவே பிறந்து இருக்கிறது
அது நம்மோட புரிதல்லாகவே வாழ்கிறது

முகத்தில் தெரியும் அழகு
அது முன்னுரை வரை மட்டும்தான்
அழகு படுத்தும்

அகத்தில் இருக்கும் அழகுதான்
பொருள்வுரையான நம் வாழ்க்கையை
அழகுபடுத்தும்
நம் முடிவுரையும் தெளிவுபடுத்தும்

நமக்கு பிரிவு என்பது
நிச்சியம் வரும்
அது நம் மரணத்தால் மட்டும் ஜெய்க்க முடியும் தவிர
நம் மனத்தால் அல்ல

எழுதியவர் : காந்தி (13-May-16, 1:00 pm)
பார்வை : 164

மேலே