என் தலை கோதி
நீ என் தோழனாக இருக்க வேண்டும்
பறந்து விரிந்த உன் தோள்கள்
என் வே-தனையை சுமக்கும்
சுமை தாங்கியாக...
உன் உதடுகள் மூடி
என் வேதனை தீர்க்கும் ..
வார்த்தைகளை உச்சரிப்பதாக......
உன் கைகள்
என் தலை கோதி,
ஆறுதல் தருவதாக.........
உன் மனம்
எனக்காக அடுத்து என்ன
செய்ய வேண்டும்
என்ற யோசனையோடு.......
உன் சிந்தை
என் சந்தோசம் எல்லாமே
உனக்காக என்று
எப்போதும் நினைப்பதாக........
கிடைக்குமா உன் தோழமை நண்பனே??