கல்வி

கல்வி
---------------------
கல்வி...
அறிவூட்டும் அகல் விளக்கு.
காலத்தால் அழியாத
புகழ் விளக்கு.
அது,
களங்கம் இல்லாத இல்லாத
கலங்கரை விளக்கு.


கல்வி,
கற்றாக்குச் சிறப்பு சேர்க்கும்
கல்லார்க்குச்சிறுமை சேர்க்கும்.

கல்வியும்
கலையும்
கலைமகள் பெற்றாள்!
விழுந்து வணங்குவோம்
கலைமகள் பொற்றாள்!

கல்வி
கற்கக் கற்க
அறிவு பொங்கும் !
அறிவு பெருகப்பெருக
அகிலம் ஓங்கும்.!

அணிகலன்கள்
ஆயிரம்
அணிந்திருந்தாலும்,
ஒருவருக்கு
அது பெருமை தராது.
கல்வி மட்டும் போதும்
கல்வி
எப்போதும் சிறுமை தராது.

---//////------

எழுதியவர் : சிவ.சுப்பிரமணியன். (25-Aug-25, 9:58 pm)
சேர்த்தது : அண்ணாதாசன்
Tanglish : kalvi
பார்வை : 26

மேலே