அண்ணாதாசன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அண்ணாதாசன் |
இடம் | : ஆழ்வார்குறிச்சி , திருநெல |
பிறந்த தேதி | : 03-Jan-1958 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 2013 |
புள்ளி | : 44 |
எனது பெயர் அண்ணாதாசன். கவிதைகள், சிறுகதைகள், வானொலி , தொலைகாட்சி நாடகங்கள், திரைஇசை பாடல்கள் ஆகியன படைத்து எழுத்துலகில் ஓசையின்றி பயணித்து வருகிறேன். சாதித்தது துளியளவு, சாதிக்க வேண்டியதது கடலளவு. இன்னும் சாதிக்கும் தாகத்தில்..........
ஒரு
சாமானியன்
சமூக அக்கறையுடன்
அரசுக்குவரையும்
அவலமடல் .!
சிரசுகனத்து
இதை நான் எழுதவில்லை. .
மனசுகனத்து
இதை நான் எழுதுகிறேன் .
அரசே !
தேசக்குடிமகன்களில்
அநேகர்
நாசக்குடி மகன்களாய்
நாட்டில்
நடமாடுகிறார்களே
இது ,
யார்செய்த பிழை ?
குடிமக்களை
'குடி' மக்களாய்
நீதானே பழக்கிவிட்டு
கூத்தாட்டம் பார்க்கிறாய்?
நீ
கடைவிரிக்கப்போய்த்தானே
அவர்களின்
நடைமாறிப்போனது?
நீ காட்டிய
போதையின் பாதையில்
அவர்கள்
போய்க்கொண்டிருக்கிறார்கள் !
'குடி'யால்
நடுத்தெருவுக்கு வந்த
குடும்பங்கள் எத்தனை..எத்தனை ?
'குடி'குடித்து
குடல் கெடுத்து
உடல்நலங்கெட்டு
உயிர
நாட்டில்நடக்கும்
தொண்ணூறு விழுக்காடு
குற்றங்களுக்கு காரணம்' குடி'தான்.
குடிமட்டும் இல்லையெனில்
அடிதடி -மண்டை உடைப்பு
குத்து- வெட்டு-கொலை- கொள்ளை
வழிப்பறி -தாலியறுப்புக்கள் -போன்ற
வன்கொடுமைகள் இருக்கவே இருக்காது .
குற்றங்களையெல்லாம்
ஆதிமூலமாய் இருந்து
அரங்கேற்றி வைப்பது
அநியாயம் கொண்ட'குடி'தான்!
சிறைச்சாலைகளில்
அடைபட்டுக்கிடக்கும்
குற்றவாளிகளில்
பலரை
அந்த
பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டது
பாழும்'குடி'தான் !
எத்தனை பெண்களின்
பூவையும் -பொட்டையும்
பறித்துக்கொண்டது
இந்த
பயங்கரக்'குடி'?
எத்தனை கும்பங்களின்
அமைதியையும்
நிம்மதியையும்
குடித்துக்க
ஒரு
சாமானியன்
சமூக அக்கறையுடன்
அரசுக்குவரையும்
அவலமடல் .!
சிரசுகனத்து
இதை நான் எழுதவில்லை. .
மனசுகனத்து
இதை நான் எழுதுகிறேன் .
அரசே !
தேசக்குடிமகன்களில்
அநேகர்
நாசக்குடி மகன்களாய்
நாட்டில்
நடமாடுகிறார்களே
இது ,
யார்செய்த பிழை ?
குடிமக்களை
'குடி' மக்களாய்
நீதானே பழக்கிவிட்டு
கூத்தாட்டம் பார்க்கிறாய்?
நீ
கடைவிரிக்கப்போய்த்தானே
அவர்களின்
நடைமாறிப்போனது?
நீ காட்டிய
போதையின் பாதையில்
அவர்கள்
போய்க்கொண்டிருக்கிறார்கள் !
'குடி'யால்
நடுத்தெருவுக்கு வந்த
குடும்பங்கள் எத்தனை..எத்தனை ?
'குடி'குடித்து
குடல் கெடுத்து
உடல்நலங்கெட்டு
உயிர
காலக்கரையான்கள்
வேர்களைக்கடித்துத்தின்றும்
படுகையாகாமல்
நாளும்துளிர்த்து...
அறைந்து அறைந்து சாத்தி
அடைத்துவைத்தாலும்
முட்டி மோதி
எப்படியாவது
மனசின் கதவுகளைத்திறந்து
அத்துமீறி நுழைந்து
அன்றாடம் அலைக்கழிக்கும்
பழையநினைவுகளின்
அடிமைக்கைதியாக
எத்தனை நாட்கள் நான்...
கிறுக்கனாக்கினாள் காதலி
ஏமாளியாக்கினர் நண்பர்கள்
துடிக்கவைத்தனர் உறவுகள்
கனவுகள் போலியாயின
சில நிஜங்கள்
நிரந்ததரமாய் பிரிந்து போயின.
உண்மைகள் ஊமையாகவும்
பரிகசிப்புகள் செவிடாகவும்
குற்றங்கள்
குருடாகவும் ஆக்கின.
பித்தாயும்
கோழையாயும்
ஊனமாயும் ஜீவித்திருந்த
பழையநினைவுகளிலிருந்து
விட்டுவிடுதலையாகி
அப்ப
நான் பார்த்தேன்
நீயும் பார்த்தாய்!
நான் சிரித்தேன்
நீயும் சிரித்தாய்!
நான்விதைத்தேன்
நீயும் விதைத்தாய்!
இங்கேயும் முளைத்தது
அங்கேயும் முளைத்தது!
நானும் வளர்த்தேன்
நீயும் வளர்த்தாய்!
இருவரும்வளர்த்த காதல்
இப்போது
விளைந்து..முதிர்ந்து
அறுவடைக்கு
ஆயத்தமாய் இருக்கும்போது
ஏனடி காதலியே
பின்னுக்கு ஓடுகிறாய்?
பயப்பாட்டு பாடுகிறாய்?
பழி
தேசம் முழுவதுமாய் ஒளிர்கின்ற
தீபங்கள் காணாதென்று
காஷ்மீரில் இன்று
தீவிரவாதிகள்
தியாகதீபங்களை ஏற்றியிருக்கிறார்கள் ...!
ஆமாம் ...
காஷ்மீர் தீவிரவாதிகள்
இந்திய ராணுவவீரர்கள் சிலரை
சுட்டுக்கொன்று விட்டார்களாம் ..
தீபத்திருநாளில்
தியாகச்சுடராகிப்போன
இந்திய வீரத்திருமகன்களுக்கு
விழி நீர் அஞ்சலி ...!
அடியே ..!
உனக்காக
நான்
எனக்குள்
ஒரு
தாஜ்மஹாலைக் கட்டிக்கொண்டிருக்கையில்
நீ
எனக்காக
உனக்குள்
ஒரு
பிரமிடு கட்டிவந்திருப்பது
இப்போதுதானடி தெரிகிறது !
செருப்புகள் பேசினால்
இப்படித்தான் பேசுமோ ...?
செருப்புகள் நாங்கள்...
இணைந்தஜோடி.
எப்போதும்
இணைபிரியாதஜோடி!
ஒருதரஜோடிஎன்றால்
உலகிலேயே
நூற்றுக்குநூறுசதம்
அதுநாங்கள்தான்.
எங்களுக்கு மிஞ்சியஜோடி
இல்லவேயில்லை !
செருப்புஜோடிதான்
சிறந்தஜோடி என்று
ஜெகமேகூறும்.
ஒரே நிறம்
ஒரே அளவு
ஒரே கனம்
ஒரேஎடை
ஒரேமாதிரி என்றால்
அது நாங்களே நாங்கள்தான் !
நாங்களும்
நாய்களைப்போலவே
விசுவாசமானவர்கள் !
காலடியிலேயே
காத்துக்கிடப்போம் !
சமயங்களில்
எங்கள் எஜமான்கள் தான்
எங்களை
மறந்து விட்டுவிடுவார்கள் .
கல்லிலும் -முள்ளிலும்
காலடியில் கிடந்தது
மனிதர்களை
காவல்காக
மரங்கள் ...
ஆகாய அன்னையை
ஆரத்தழுவ
ஆயிரமாயிரமாய்
எழுந்து நிற்கும்
மண்ணின் கரங்களா ?
விண்ணக அன்னைக்கு
மண்ணகம் வீசும்
சாமரங்களா
பூமரங்கள் ...?
பூமிமகள்
எப்போதும்
எடுத்து உடுத்தும்
பச்சைப் பட்டாடையா
இச்சைஊட்டும்
பச்சைமரங்கள்... ?
தென்றலும் புயலும்
திவ்வியமாய்ஆட
பூமி
அமைத்துக்கொடுத்த
அழகரங்கம்தானா
ஆடிநிற்கும் மரங்கள்... ?
காலம்காலமாய்
வானம்பாடிகளாய்
காற்றுப் பாடல்
பாடிக்கொண்டிருக்கும்
கானம்பாடிகளா
கவினுறும் மரங்கள்...?
ஞாலமெங்கும்
காலம்தோறும்
தவமாய் தவமிருந்து
வண்ண மழையை
வருவித்துத் தரும்
தவப் பிறவிகளே
தளிர் மரங்கள் .....!