விட்டு விடுதலையாகி

காலக்கரையான்கள்
வேர்களைக்கடித்துத்தின்றும்
படுகையாகாமல்
நாளும்துளிர்த்து...

அறைந்து அறைந்து சாத்தி
அடைத்துவைத்தாலும்
முட்டி மோதி
எப்படியாவது
மனசின் கதவுகளைத்திறந்து
அத்துமீறி நுழைந்து
அன்றாடம் அலைக்கழிக்கும்
பழையநினைவுகளின்
அடிமைக்கைதியாக
எத்தனை நாட்கள் நான்...

கிறுக்கனாக்கினாள் காதலி
ஏமாளியாக்கினர் நண்பர்கள்
துடிக்கவைத்தனர் உறவுகள்
கனவுகள் போலியாயின
சில நிஜங்கள்
நிரந்ததரமாய் பிரிந்து போயின.

உண்மைகள் ஊமையாகவும்
பரிகசிப்புகள் செவிடாகவும்
குற்றங்கள்
குருடாகவும் ஆக்கின.

பித்தாயும்
கோழையாயும்
ஊனமாயும் ஜீவித்திருந்த
பழையநினைவுகளிலிருந்து
விட்டுவிடுதலையாகி
அப்புறம் போக எண்ணுகிறேன்.

அந்தக்கொடுமை நினைவுகள்
வந்து வந்து ஒட்டுகின்றன
கூரியகொடுக்குகளால்
தினம் தினம் கொட்டுகின்றன.

ரணங்கள் போதும்
தாங்கமுடியவில்லை.
எனைவிடுத்து
பழையநினைவுகளே
பறந்து போய்விடுங்கள்.

பறக்கச்சிறகில்லையாகின்
ஓடிப்போய் விடுங்கள்.
ஓடமுடியாதெனில்
மெல்ல மெல்ல
நடந்தாகிலும்...

வலிகளேவிலகுங்கள்
ஒரு புதியபயணம் தொடர
வழிவிடுங்கள்!

எழுதியவர் : அண்ணாதாசன் (9-Feb-17, 7:47 pm)
சேர்த்தது : அண்ணாதாசன்
பார்வை : 99

மேலே