ஜின்னா - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  ஜின்னா
இடம்:  கடலூர் - பெங்களூர்
பிறந்த தேதி :  30-Aug-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jun-2014
பார்த்தவர்கள்:  5429
புள்ளி:  3341

என்னைப் பற்றி...

என்னைப் பற்றி....
-------------------------
கவிதைக்காக பிறந்து கணினி துறையில் வேலை பார்க்கும் ஒரு சராசரி தமிழன்.

நான் எழுதிய / எழுதும் கவிதைகளைப் பற்றி.....
---------------------------------------------------------------------
என் உணர்ச்சி நதியின் காகித ஓடங்கள் .

என் இளமைக் காலங்களின் ஏக்கப் பெருமுச்சுகள் .

என் தனிமை தவத்தின் தத்துவ வரங்கள் .

முடியாது என தெரிந்தபோதும் உலகத்தோடு மீண்டும் மீண்டும் மோதிப்பார்த்த என் கவிதை என்னும் கஜினிமுகமதுகள் .

என் கவலைத் தோட்டத்துக் கண்ணீர்ப் பூக்கள் .

ஆரம்பப் புள்ளி ஆசையை மறக்க முடிவுப் புள்ளியான மரணத்தைத் தேடி ஓட நினைக்கும் மூடச்சிறுவனின் முறிந்த சிறகுகள் .

என் பிடிவாதத்திற்குள்ளான பிரசவ வேதனைகள் .

இத்தனை ஆண்டுகளாகியும் இன்னும் மனிதர்களை நம்ப முடியவில்லையே எனத் துடித்துக் கொண்டிருக்கும் என் ஊமை இதயத்தின் ஒலியற்ற ஓசைகள் .

என் காதல் மனதிற்கு நான் கட்டிய தாஜ்மகால்கள் .

ஒரு சிலரின் காதல் மரணத்திற்கு நான் எழுதி வைத்த கல்லறை வாசகங்கள் .

அழகாகச் சொன்னால் அத்தனையும் காகித மொழிகள்
ஆழமாகச் சொன்னால் அத்தனையும் கவிதைகள் .

கவிதைகளுக்குள்ளே .......
---------------------------------------
என்னை நானே சில சமயங்களில் தேடி அலைந்திருக்கிறேன் .

எனக்கு வியப்பாக இருந்ததையெல்லாம் என் விரலசைவில் கொண்டுவர முயன்றிருக்கிறேன் .

சில கலவரங்களால் காயப்பட்டிருக்கிறேன் .

சில கொடுமைகளால் கண்ணிர் விட்டிருக்கிறேன் .

மனிதர்களைப் பற்றி மோசமாக எழுதுகிறேன் . காரணம் சிரித்துக் கொண்டிருந்த பூமிக்கு முதன்முதலில் கண்ணீர் விட கற்றுக் கொடுத்தவன் மனிதன்தான் .

இங்கே ......

இயற்கையை நேசிக்கத் தெரிந்த எனக்கு மனிதர்களை நேசிக்கத் தெரியவில்லை என்பதில் சிறு வருத்தம். ஆனால் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மனிதர்களைப் பார்த்து தெரிந்துகொண்டதைவிட இயற்கையைப் பார்த்து தெரிந்து கொண்டதில் ஒரு மகிழ்ச்சி .

இதில் ....

கவிதைகளைப் பார்த்தால் நானிருப்பேன் ....

கவிதைகளுக்குள் பார்த்தால் நீங்கள் இருப்பீர்கள் ....

என் படைப்புகள்
ஜின்னா செய்திகள்
நிஷாந்த் அளித்த படைப்பில் (public) Kamesh98 மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Apr-2016 7:26 am

அறியாத வயசில்
கண்ணாமூச்சு ஆட்டம்
ஆடி பின்னாளில்
தொலைந்த
கா வா பழமா
நட்பல்ல . . !

பள்ளிக்கூடத்தில்
சதா சண்டையிட்டுக்கொண்டு
கொடுத்தல் வாங்கல்
கணக்கு வைத்துக்கொள்ளும்
தியாகம் அறியா
சிறுபிள்ளை நட்பல்ல . . !

உயிராக காதலித்து பின்
காதல் ஒத்து வரல
நட்பாக பழகலாம்
என தடம் மாறிய
நட்பும் அல்ல . . !

அறியாத எண்களிலோ
முகப்புதிரையிலோ
பேசி சிநேகமானா
யாரோ ஒரு
முகம் அறியா
நட்பல்ல . . !

அந்த இறைவன்
நான் ரசிப்பதை எல்லாம்
உன்னிடத்தில் தந்து
உன்னை எனக்கு
அறிமுகம் செய்த நட்பு

பெண் என்றாலும்
பெண்ணாக பழகாதவள்
குறும்புகளால் சிறுமியாகவும்
அன்பால் தாயாகவும்
'Goiyala' னு
சொல்லு

மேலும்

உங்கள் கவிதையில் என்னைக்கான்கிறேன் ,கவிதைக்கு உள்ள கடவுள் தன்மையை உங்களால் காண்கின்றேன் .....கவிதை இன்பத்தின் கூடு ,அதில் நானும் இருகின்றேன் என் தோழியின் அன்போடு .எனை கவிதை உலகிற்கு அறிமுகம் செய்தவள் .ஆனால் அவளன்பு என்னிடத்தில் இருந்தாலும் அவளும் அவள் மொழியும் என்னுடன் இல்லை ...உங்கள் கவிதையினால் ஏக்கம் கொள்கிறேன் ....அவளை ஒருநாள் சந்திப்பேன் என்று ....மிக்க அருமை . 21-Apr-2016 10:04 am
மிக்க நன்றி தோழமை . . . 14-Apr-2016 2:07 pm
மிக்க நன்றி தோழமை . . . 14-Apr-2016 2:07 pm
மிக்க நன்றி தோழமை . . . 14-Apr-2016 2:07 pm
முரளி அளித்த எண்ணத்தை (public) முரளி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
28-Mar-2016 9:18 am

இன்றைய தினமணி கவிதைமணியில் எனது கவிதை....

அணையட்டும் சாதீ: முரளி

நமது தோழமைகள் பலர் படைப்புகளும் வெளிவந்துள்ளது.....  அன்புடன்
முரளி 

மேலும்

வாழ்த்துக்கள் சார்..! 28-Mar-2016 10:17 pm
வாழ்த்துக்கள் முரளி சார்..இன்னும் இது போன்ற பல வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து அளித்திட! 28-Mar-2016 4:43 pm
பாராட்டுகள். தொடரட்டும் உமது தமிழ் இலக்கியப் பயணம். நன்றி 28-Mar-2016 4:28 pm
வாழ்த்துக்கள் அய்யா..! 28-Mar-2016 4:12 pm
பாரதி நீரு அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 11 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Mar-2016 12:48 am

1. ************************************************
நீளும் சாதியக் கொலை
கண்ணீரோடு அலறும்
கலப்புதிருமணம்2. ************************************************
மண்ணில் விழுந்து
மழையால் பிழைக்கிறது
விதைகள்


3. ************************************************
சாலையில் உடைபட்டு கிடக்கிறது
மூடநம்பிக்கையில்
பூசணிக்காய்4. ************************************************
நிசப்தமான நடுநசி
விழித்துக் கொண்டிருகின்றன
நடைபாதை விளக்குகள்5. ************************************************
அம்மா கை பட்டதும்
பிள்ளையாராகி விடுகிறது
சாணம்6.****************

மேலும்

நன்றி நன்றி 04-Apr-2016 8:12 pm
அருமை நண்பரே... அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் 03-Apr-2016 2:32 pm
நன்றி சகோ, ரசிபிற்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் .... 02-Apr-2016 10:49 am
சாலையில் உடைபட்டு கிடக்கிறது மூடநம்பிக்கையில் பூசணிக்காய் // கம்பீரமான ஹைக்கூ.. அனைத்தும் வெகு சிறப்பு சகோ. 01-Apr-2016 11:46 pm
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) CheGuevara Gopi மற்றும் 13 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Apr-2016 12:15 am

மீன்கார மாரி
பரிசல்கார காளி
ஒட்டக லோனு வேணுமா.?
*****************

“ஐந்தாண்டுக்கு முன்
ஆற்றில் போயிட்டாள் அம்மா”
“ஆறுனா என்னப்பா..?”
********************

எருமையை
வரைந்து முடித்தேன்
கொம்பால் முட்டுகிறது.
*****************

நிழலைக் கூட
அழிக்க முடியவில்லை
கொதிக்கிறான் சூரியன்
*************************

சுவரெங்கும்
பச்சை இலைகள்
உயிரற்ற சிரிப்பு
***********************

மலை பிளந்தவனுக்கு
விடுதலைக் கிரீடம்
மயங்குது நீதி
*********************

கழுத்தில் கத்தி
முழக்கம் எழவில்லை
தேசத்துரோகி
********************

பல்கலைக் கழகம்
ஒரேயொரு பாடம்
பாரத் மாதாகி ஜே
*

மேலும்

மிகவும் நன்றி அபி! 08-Apr-2016 10:19 pm
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..! 08-Apr-2016 3:58 pm
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..! 08-Apr-2016 3:57 pm
நிறைவுப் பகுதி உங்களை நிறைவடையச் செய்திருக்கிறது எனில்..எனக்கும் மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி..! கருத்துக்கு மிக்க நன்றியும் அன்பும் ஜின்னா..! 08-Apr-2016 3:57 pm
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) கோபி சேகுவேரா மற்றும் 7 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Apr-2016 12:15 am

மீன்கார மாரி
பரிசல்கார காளி
ஒட்டக லோனு வேணுமா.?
*****************

“ஐந்தாண்டுக்கு முன்
ஆற்றில் போயிட்டாள் அம்மா”
“ஆறுனா என்னப்பா..?”
********************

எருமையை
வரைந்து முடித்தேன்
கொம்பால் முட்டுகிறது.
*****************

நிழலைக் கூட
அழிக்க முடியவில்லை
கொதிக்கிறான் சூரியன்
*************************

சுவரெங்கும்
பச்சை இலைகள்
உயிரற்ற சிரிப்பு
***********************

மலை பிளந்தவனுக்கு
விடுதலைக் கிரீடம்
மயங்குது நீதி
*********************

கழுத்தில் கத்தி
முழக்கம் எழவில்லை
தேசத்துரோகி
********************

பல்கலைக் கழகம்
ஒரேயொரு பாடம்
பாரத் மாதாகி ஜே
*

மேலும்

மிகவும் நன்றி அபி! 08-Apr-2016 10:19 pm
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..! 08-Apr-2016 3:58 pm
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..! 08-Apr-2016 3:57 pm
நிறைவுப் பகுதி உங்களை நிறைவடையச் செய்திருக்கிறது எனில்..எனக்கும் மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி..! கருத்துக்கு மிக்க நன்றியும் அன்பும் ஜின்னா..! 08-Apr-2016 3:57 pm
ஜின்னா - முரளி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2016 11:15 am

俳句 - ஹைக்கூ  குறுங் கவிதைகள் விழா
"நடமாடும் நதிகள்"

நிறைவுப்  பகுதி

திரு பொள்ளாச்சி  அபி 

கவிதை காண சொடுக்கவும்


இதுவரை பதிந்த ஹைகூக்கள் காண  சொடுக்குக  பட்டியல்  

தொடர் வெற்றிக்குப் பாடுபட்ட அனைத்து நண்பர்களுக்கும், உற்சாகத்துடன் படைப்பளித்த  தோழமைகளுக்கும், வாசித்து, கருத்தளித்து, அதரவு   தந்த, அனைத்து கவிதை ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...  


அன்புடன்
முரளி


மேலும்

view-ennam/30238... நன்றி....!! 03-Apr-2016 1:08 pm
தங்களின் உன்னதமான ஒருங்கிணைப்பில் மற்றுமொரு வெற்றித் தொடர், இந்த தொடருக்கு காரணமான திரு ஜின்னா, இதற்கு உறுதுணையாக நின்ற திரு ஆண்டன் பெனி, திரு காளிதாஸ் அனைவருக்கும் நன்றிகள். தொடரில் அனைவரும் படித்து மகிழ தங்கள் ஹைக்கூக்களை தந்து பங்குபெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டுகள். முரளி அய்யா.. கசல் மாலை போல் இதற்கும் தங்கள் கைவண்ணம் ஏதாவது இருக்கிறதா என்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். 02-Apr-2016 12:56 pm
பயனத்த =பயணத்தை 01-Apr-2016 10:08 pm
புதுவையில் தொடங்கிப் பொள்ளாச்சி வரை பயணித்த நடமாடும் நதியில் இணைத்துக்கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹைக்கூ சிற்றாறுகளுக்கும் அவ்வப்போது வந்து கால் நனைத்து மகிழ்ந்த என் போல் ரசிகப்பெருமக்களுக்கும் மடை திறந்து நதியலையைப் பாயவிட்ட ஜின்னாவிற்கும் நதி வழிப் பயனத்த ஒருங்கிணைத்த முரளி சார், ஆண்டன் பெனி, காளிதாஸ் ஆகியோருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் "வளர்வோம் வளர்ப்போம்" ' 01-Apr-2016 10:07 pm
பாரதி நீரு அளித்த படைப்பை (public) கோபி சேகுவேரா மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
31-Mar-2016 12:48 am

1. ************************************************
நீளும் சாதியக் கொலை
கண்ணீரோடு அலறும்
கலப்புதிருமணம்2. ************************************************
மண்ணில் விழுந்து
மழையால் பிழைக்கிறது
விதைகள்


3. ************************************************
சாலையில் உடைபட்டு கிடக்கிறது
மூடநம்பிக்கையில்
பூசணிக்காய்4. ************************************************
நிசப்தமான நடுநசி
விழித்துக் கொண்டிருகின்றன
நடைபாதை விளக்குகள்5. ************************************************
அம்மா கை பட்டதும்
பிள்ளையாராகி விடுகிறது
சாணம்6.****************

மேலும்

நன்றி நன்றி 04-Apr-2016 8:12 pm
அருமை நண்பரே... அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் 03-Apr-2016 2:32 pm
நன்றி சகோ, ரசிபிற்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் .... 02-Apr-2016 10:49 am
சாலையில் உடைபட்டு கிடக்கிறது மூடநம்பிக்கையில் பூசணிக்காய் // கம்பீரமான ஹைக்கூ.. அனைத்தும் வெகு சிறப்பு சகோ. 01-Apr-2016 11:46 pm
மனக்கவிஞன் அளித்த படைப்பில் (public) CheGuevara Gopi மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Mar-2016 7:22 am

நடமாடும் நதிகள் 54

1, காலணி தைப்பவன்
தைக்கிறான் பாதசுவடுகளோடு
பித்தவெடிப்புகளோடு

2, பிள்ளையின் பாசத்தை
நிறைவேத்துகிறாள் அம்மா
அடகுக் கடைகளில்

3, பசுமை விவசாயி
குளிக்கிறான்
கட்டனக் கழிப்பறையில்

4, போக்குவரத்து காவலர் காத்திருந்தார்
அவர் இடத்தில்இருக்கும்
வண்டியை  எடுக்க

5, ராணி தேனியை காத்துக் கொண்டிருந்தது
ஆண் தேனீக்கள்
கொலை செய்த பெண்சடலம் முன்பு

6, புன்னகையை சொல்லிக்கொடுத்தார்கள்
செய்முறை விளக்கத்தில்
பொக்கை வாய் பாட்டிகள்

7, கசாப்பு கடைகளின்
வெட்டுக்கத்தி காத்திருந்தது
அறுவடை செய்ய

8, வெள்ளை வேட்டி வாங்கினார்
வயலில் இறங்கும்
விவசாயி

9,

மேலும்

நன்றி தோழமையே 02-Apr-2016 3:51 pm
நன்றி தோழமையே ரசித்து கருத்துக்கள் கூறியமைக்கு புன்னகையை சொல்லிக்கொடுத்தார்கள் செய்முறை விளக்கத்தில் பொக்கை வாய் பாட்டிகள் இந்த கருத்தில் நான் கூற நினைத்தது சிரிப்பு பிற்காலத்தில் அழிந்து விடும் என்று எச்சரிக்கை செய்தேன் நன்றி 02-Apr-2016 3:50 pm
நன்றி தோழமையே ரசித்து கருத்துக்கள் கூறியமைக்கு 02-Apr-2016 3:46 pm
அருமையான ஹைக்கூக்கள். வாழ்த்துக்கள்.....😊 02-Apr-2016 3:10 pm
ஜின்னா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2016 11:52 am

இன்பம்
=======

உயிர்கள் வசிக்கும் உலகப் பந்தில்
ஒளிந்து கொண்டிருக்கும் உணர்வின் பிம்பமே!

ஆசைகள் திரியும் ஆகாயச் சந்தையில்
பாஷைகள் புரியாத பைத்திய வேதமே!

கனவில் மிதக்கும் காதற் படகில்
அனலை அடிக்கும் அலையின் மோகமே!

நினைவில் நின்று நெஞ்சைத் துளைத்து
கனவில் இனிக்கும் குயிலின் ராகமே!

நதிகள் இசைக்கும் தண்ணீர் கீதமே
பதில் பேசாத உணர்ச்சியின் மீதமே!

குழந்தை இதழில் ஒளிந்து கொண்டு
அழுது கொள்ளும் அழகின் சிரிப்பே!

மெழுகின் உடலில் மறைந்து கொண்டு
ஒழுகிச் செல்லும் ஒளியின் விரிப்பே!

கட்டில் ரகசியம் கேட்டுக் கேட்டே
மொட்டு அவிழ்த்த தசைமலர்ப் பாட்டே!

பத்து மாதம்

மேலும்

நல்ல வார்த்தைக் கோர்வை ... வாழ்த்துக்கள் ஜின்னா - தாங்கள் புத்தகம் வெளியிட்டுள்ளீர்கள் என அறிகிறேன். புத்தகத்தின் பெயர் என்ன? எங்கு கிடைக்கும் எனச் சொல்லுங்களேன் 02-May-2016 3:53 am
மிக்க நன்றி... ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் பல... வளர்வோம் வளர்ப்போம்... 21-Apr-2016 12:38 am
அருமையான நடை நண்பர் ஜின்னா அவர்களே. சொல்லாக்கமும் கருத்தும் அருமை. கணிமழைச் சாரலில் - கணி , இங்கு எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை கனி, கணியாக அச்சேறிவிட்டதா என்பதைத் தெரிவிக்கவும். 05-Apr-2016 7:29 pm
மிக்க நன்றி... ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் பல... வளர்வோம் வளர்ப்போம்... 01-Apr-2016 11:44 pm
ஜின்னா - எண்ணம் (public)
15-Mar-2016 6:06 pm

இறுதி பட்டியல் - நடமாடும் நதிகள்
==================================

தோழர் தோழமைகளுக்கு வணக்கம்...

நடமாடும் நதிகளில் இனி எழுத போகும் பெயர் பட்டியல் கீழே தரப் பட்டுள்ளது...
தயவு செய்து இனி எழுத போகும் அனைவரும் தங்கள் உறுதி மொழியை "தாங்கள் தங்களுடைய தேதியில் கண்டிப்பாக பதிக்கிறோம்" என்ற உறுதி மொழியை உடனே எனது மின்னஞ்சலுக்கு தெரிய படுத்தவும்...
அப்படி உறுதி படுத்தாத நபர்களின் பெயர்களை உடனடியாக இந்த பட்டியலில் இருந்து நீக்கப் பட்டு ஒரு புதிய பட்டியல் மற்றும் இறுதி பட்டியலாக கூடிய விரைவில் வெளியிடப் படும்...

இனி எழுத போகும் பெயர் பட்டியல்...
--------------------------------------------------

40. ஸ்ரீமதி மகாலட்சுமி - (16-MAR-2016)      
41. மணி அமரன் - (17-MAR-2016)           
42. அமுதா அமுதா - (18-MAR-2016)         
43. பனிமலர் - (19-MAR-2016)                
44. திருமூர்த்தி - (20-MAR-20156)             
45. சாய் மாறன்  - (21-MAR-2016)            
46. நித்யஸ்ரீ  - (22-MAR -2016)               
47. கோபி சேகுவேரா - (23-MAR -2016)      
48. ராஜ்குமார் -(24-MAR -2016)               
49. காஜா - (25-MAR -2016)                  
50. தேனீ  செ கார்த்திகேயன் -(26-MAR-2016) 
51. ஆசை அஜீத் - (27-MAR-2016)            
52. KR ராஜேந்திரன் - (28-MAR-2016)          
53. சக்கரை வாசன் - (29-MAR-2016)         
54. மலர் (சுவாமிநாதன்) - (30-MAR-2016)    
55. பொள்ளாச்சி அபி - (31-MAR -2016) 

வாழ்த்துக்களுடன்,
ஜின்னா

வளர்வோம் வளர்ப்போம்...

மேலும்

எனக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் (மார்ச் 21) 100% நான் பதிவேன் 20-Mar-2016 12:37 pm
அனைவருக்கும் வாழ்த்துக்கள் . தமிழ் அன்னை ஆசிகள். இலக்கியப் பயணம் தொடரட்டும். நன்றி . 15-Mar-2016 11:24 pm
ஜின்னா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2016 1:10 am

1.***************************************
கண்ணாடியில் முகம் பார்க்கிறேன்
தெளிவாக தெரியவில்லை
என் முகமூடி

2.***************************************
பெரியாரின் கல்லறையைச் சுற்றி
பூத்துக் கொண்டிருக்கிறது
ஜாதி மல்லி

3.***************************************
அழுகிறது குழந்தை
அம்மா என்று கத்துகிறது
தொழுவத்தில் பசு

4.***************************************
தேன்குடிக்கும் வண்டுகள்
மகரந்தச் சேர்க்கையில் மரணிக்கிறது
பூக்களில் மீத்தேன்

5.***************************************
உயர்சாதி மனிதனுக்குள்
ஓடிக் கொண்டிருக்கிறது
ஒடுக்கப் பட்டவனின் ரத்தம்

6.*************************

மேலும்

தங்கள் பிறந்ததின நன்னாளில் கவிதை இலக்கியம் பல படைக்க வேண்டுகிறேன் கவிதை நயம் அருமையான எழுத்தாளுமை திறன் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் தமிழ் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 30-Aug-2016 5:54 am
மிக்க நன்றி நண்பரே... வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் பல... 28-Mar-2016 11:20 pm
ஹைக்கூ வரிகளில் தெளிவாகத் தெரிகிறது ... உங்களின் கவிதை மனமும், வார்த்தைகளை அழகாக கையாளும் திறமையும். இது போன்ற வரிகளை அனுபவித்து ரசிப்பதற்கு இத்தனைக் காலம் ஆயிற்று. 28-Mar-2016 11:02 pm
மிக்க நன்றி தோழமையே... தங்கள் ரசனையில் மகிழ்ச்சி... தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் பல... வளர்வோம் வளர்ப்போம்... 22-Mar-2016 10:42 pm
ஜின்னா - எண்ணம் (public)
06-Feb-2016 1:19 am

நடமாடும் நதிகள் - ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 4

=================================================

எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... 
இன்று சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...

இந்த தொடரில் எழுத போகும் பட்டியல்:
********************************************

 1. அகன் - (06-FEB-2016)
 2. ஆண்டன் பெனி - (07-FEB-2016)
 3. கவிஜி - (08-FEB-2016)
 4. ராஜன் - (09-FEB-2016)
 5. கருணா - (10-FEB-2016)
 6. சந்தோஷ் குமார் - (11-FEB-2016)
 7. பழனி குமார் - (12-FEB-2016)
 8. சுஜய் ரகு - (13-FEB-2016)
 9. ஜின்னா  - (14-FEB-2016)
 10. கட்டாரி சரவணா  - (15-FEB-2016)
 11. ஷ்யாமளா  - (16-FEB-2016)
 12. மணிமீ  - (17-FEB-2016)
 13. கனா காண்பவன்  - (18-FEB-2016)
 14. ஷாந்தி  - (19-FEB-2016)
 15. உமை  - (20-FEB-2016)
 16. குமரேசன் கிருஷ்ணன்  - (21-FEB-2016)
 17. ஜோசெப் ஜூலியஸ் - (22-FEB-2016)
 18. நிலா கண்ணன்  - (23-FEB-2016)
 19. முரளி TN   - (24-FEB-2016)
 20. கார்த்திகா AK  - (25-FEB-2016)
 21. கவித்தா சபாபதி  - (26-FEB-2016)
 22. மதிபாலன்  - (27-FEB-2016)
 23. கருகுவெலதா - (28-FEB-2016)
 24. மனொரெட் - (29-FEB-2016)
 25. பிரியா ஐசு - (01-MAR-2016)
 26. வேளாங்கண்ணி- (02-MAR-2016)
 27. புனிதா வேளாங்கண்ணி - (03-MAR-2016)
 28. இனியவன் - (04-MAR-2016)
 29. நாக ராணி மதனகோபால் - (05-MAR-2016)
 30. கயல்விழி - (06-MAR-2016)
 31. கே.விக்னேஷ் - (07-MAR -2016)
 32. ஆதிநாடா - (08-MAR -2016)
 33. செல்வ முத்தமிழ் - (09-MAR -2016)
 34. நாராயண சுவாமி ராமச்சந்திரன் - (10-MAR-2016)
 35. அனு ஆனந்தி - (11-MAR-20156)
 36. ஜெய ராஜ ரத்தினம் - (12-MAR-2016)
 37. எசேக்கியல் காளியப்பன் - (13-MAR-2016)
 38. விவேக் பாரதி - (14-MAR-2016)
 39. குருச்சந்திரன் கிருஷ் - (15-MAR-2016)
 40. ஸ்ரீ மதி மகாலட்சுமி - (16-MAR-2016)
 41. மணி அமரன் - (17-MAR-2016)
 42. அமுதா அமுதா - (18-MAR-2016)
 43. பனிமலர் - (19-MAR-2016)
 44. திருமூர்த்தி - (20-MAR-2016)
 45. சாய்மாரன் - (21-MAR-2016)
 46. நித்ய ஸ்ரீ - (22-MAR -2016)
 47. சேகுவாரா கோபி - (23-MAR -2016)
 48. ராஜ்குமார் -(24-MAR -2016)
 49. காஜா - (25-MAR -2016)
 50. தேனீ எஸ் கார்த்திகேயன் -(26-MAR-2016)
 51. ஆசை அஜீத் - (27-MAR-2016)
 52. KR ராஜேந்திரன் - (28-MAR-2016)
 53. சக்கரை வாசன் - (29-MAR-2016)
 54. மலர் (சாமிநாதன்) - (30-MAR-2016)
 55. பொள்ளாச்சி அபி - (31-MAR -2016)

நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
**************************************************

 1. இந்த தொடரில் வரும் அனைத்து படமும் இங்கே பதிந்துள்ள முறைப்படி இந்த படம்தான் வர வேண்டும்...
 2. ஒவ்வொரு நாளும் இந்த படத்தை யார் எழுத போகும் என தோழர் முரளி அவர் ஒரு நாளைக்கு முன்பாகவே அவர் எண்ணத்தில் தெரிவிப்பார் (எடுத்துக் காட்டுக்கு மேலே உள்ள படத்தை போல) அந்த படத்தை பதிவிறக்கம் செய்து தாங்கள் எழுதும் போது பதிய வேண்டும்...
 3. அவரவர் கவிதை பதியும் போது இங்கே கொடுக்கப் பட்டுள்ள படத்தைதான் பதிய வேண்டும். வேறு படத்தை பதிக்க கூடாது. அவரவர்களுக்கு இந்த படத்திற்கு அவரவர் பெயர்கள் பதித்து தயார் செய்து வைத்தாகி விட்டது. ஆனால் ஒவ்வொரு நபரும் தாங்கள் பதிய போகும் முதல் நாள் முரளி சாரின் எண்ணத்தை பார்க்க வேண்டும். அதில் அவர் அன்று எழுதிய நபரை பற்றியும் நாளை எழுத போகும் நபரை பற்றியும் ஒரு தகவல் அளிப்பார். அதில் அடுத்த நாள் எழுத போகும் நபருக்கான படத்தை அவர் பெயரோடு பதிவிடுவார். அந்த படத்தை எடுத்து தாங்கள் பதிவிடும் கவிதைக்கு படமாக பதிவிட வேண்டும். உதாரணமாக இப்போது அகன் அய்யாவின் பெயர் தாங்கிய படம் ஒன்றை பதிவிட்டு உள்ளேன். அதை அவர் பதிவிறக்கம் செய்து அவர் கவிதை பதியும் போது பதிய வேண்டும்.
 4. நாம் கொடுத்துள்ள படத்தை தவிர வேறு எந்த படமும் பதிவிட கூடாது.
 5. அதே போல நாம் கொடுத்த தலைப்பை தவிர வேறு தலைப்பையும் பயன்படுத்த கூடாது.
 6. இந்த தொடரில் எழுதும் அனைவரும் அவரவர் வரிசை எண்ணிற்கு இணங்க சரியான தலைப்பை பதிவிட வேண்டும். உதாரணமாக எனது வரிசை எண் 9 என்றால் எனது தலைப்பு நடமாடும் நதிகள் - 9 என்று பதிய வேண்டும்.
 7. அவரவர்கள் அவர்களின் தேதியில் மட்டுமே பதிய வேண்டும். வேறு ஒருவரின் தேதியிலோ அல்லது வரிசை எண்ணிலோ பதிய கூடாது. ஒருவர் அவரின் தேதியில் பதிய தவறினால் அவருக்கு வேறு தேதி ஒதுக்க பட மாட்டாது. மேலும் அவருக்கு இந்த தொடரில் எழுத வாய்ப்பும் அளிக்கப் பட மாட்டாது. வேண்டுமென்றால் அடுத்த தொடரில் எழுத வாய்ப்பளிக்க முடியும்.
 8. ஒரு பத்தி கண்டிப்பாக மூன்று வரிகளுக்கு மேல் இருக்க கூடாது.
 9. அதிக பட்சமாக 10 பத்திகள் எழுதலாம். அதாவது 30 வரிகளுக்கு மிகாமல் தங்கள் படைப்பு இருத்தல் வேண்டும். அப்படி 30 வரிகளுக்கு மேல் எழுதுபவர்களுக்கு அடுத்த கட்ட நகர்த்தலுக்கு அந்த படைப்பை எடுத்துக் கொள்ள முடியாது.

இந்த தொடருக்காக படத்தை தந்த எனது நண்பர் கமல் காளிதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி...

இன்றிலிருந்து எல்லோருக்கும் ஹைக்கூ ஜுரம் அடிக்கட்டும் !
அதற்கு மருந்தாக ஹைக்கூ கவிதையை படித்தே முடிக்கட்டும் !!

வாழ்த்துக்கள் அனைவருக்கும்,

வளர்வோம் வளர்ப்போம்....

நட்புடன்,
ஜின்னா.

மேலும்

மிக்க நன்றி தம்பி... வளர்வோம் வளர்ப்போம்... 10-Feb-2016 11:47 pm
மிக்க நன்றி சார்... வளர்வோம் வளர்ப்போம்... 10-Feb-2016 11:47 pm
மிக்க நன்றி சார்... வளர்வோம் வளர்ப்போம்... 10-Feb-2016 11:47 pm
வாசிப்பை 06-Feb-2016 12:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (357)

ஆர் எஸ் கலா

ஆர் எஸ் கலா

மலேசியா
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
வினோ

வினோ

துபாய்

இவர் பின்தொடர்பவர்கள் (359)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
கியாஸ் கலீல்

கியாஸ் கலீல்

தர்ஹா நகர்

இவரை பின்தொடர்பவர்கள் (368)

JAKIR

JAKIR

வந்தவாசி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
sainath

sainath

பெங்களூர்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே