நடமாடும் நதிகள் - 55 பாரதி செல்வராஜ் செ
1. ************************************************
நீளும் சாதியக் கொலை
கண்ணீரோடு அலறும்
கலப்புதிருமணம்
2. ************************************************
மண்ணில் விழுந்து
மழையால் பிழைக்கிறது
விதைகள்
3. ************************************************
சாலையில் உடைபட்டு கிடக்கிறது
மூடநம்பிக்கையில்
பூசணிக்காய்
4. ************************************************
நிசப்தமான நடுநசி
விழித்துக் கொண்டிருகின்றன
நடைபாதை விளக்குகள்
5. ************************************************
அம்மா கை பட்டதும்
பிள்ளையாராகி விடுகிறது
சாணம்
6.************************************************
தட்டில் விழுந்தது காசு
முகத்தில் மலர்ந்தது சிரிப்பு
பிச்சைக்காரன்
7. ************************************************
மனிதனை முட்டாள் ஆக்குவதில்
முதுகலை பட்டம் பெற்றவன்
மனிதன்
8. ************************************************
கழனியில் உழவன்
கைபிடியில் காளை மாடு
உழவு
9.************************************************
மரங்கள் குறைந்தன
மழைகள் மறைந்தன
புத்தாக்க பூமி
10.***********************************************
கற்களோ முட்களோ
வேகம் குறைவதில்லை
நடமாடும் நதிக(ள்)ளிடம்
வேண்டுக்கோள் ஏற்று வாய்ப்பு அளித்தவர்களுக்கு நன்றி:
1.தாெடர் நடத்தும் திரு.ஜின்னா
2. முகப்பட வடிவமைத்த திரு கமல் காளிதாஸ்
3. தொடர் ஒருங்கிணைப்பாளர் திரு முரளி TN
4. முகப்பட பெயர் பதித்தவர் திரு ஆண்டன் பெனி
மற்றும்
எழுத்து தள நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.....
பிரியமுடன்
பாரதி செல்வராஜ். செ