ஒன்று சேர் தமிழா

தமிழா உன் நிலையை நீ முதலில் அறி?
இன்னும் ஏன் கைகொடுக்க மறுக்கிறாய்
உன் பலவினத்தால் உன் இனம் அழிந்து போகலாமா ?
உனக்கு என ஒரு வரலாறு உண்டு அதை தேடி பார் உன் நிலை உணர்வாய் நீ !
அதை அழிந்து போக விடலாமா?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வு உண்டு
ஒவ்வொரு சிந்தனை உண்டு
ஒவ்வொரு வேதனை உண்டு
இதை எல்லாம் உள் வாங்கி உரம் போட்டு
உன் ஒற்றுமையை வளர்த்துக் கொண்டு
எங்கள் சமூகத்தைப் பீடித்து இருக்கும் பீடைகள் அனைத்தையும் அழிப்போம்
ஒன்று சேர் தமிழா! ஆரோக்கியமான சமூகத் தோட்டத்தை உருவாக்குவோம்

எழுதியவர் : கலையடி அகிலன் (31-Mar-16, 2:14 am)
Tanglish : ondru ser thamila
பார்வை : 103

மேலே