இராசரத்தினம் அகிலன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : இராசரத்தினம் அகிலன் |
இடம் | : காலையடி பண்டத்தரிப்பு யா |
பிறந்த தேதி | : 03-Mar-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 3097 |
புள்ளி | : 697 |
பிறந்து வளந்த இடம் காலையடி மறு மலர்சி மன்றம்
வாழ்வது ..புலம்பெயர்தேசத்தில்
பொழுது போக்கு .. நேரம் கிடைக்கும் பொழுது தமிழ் மொழி மீது கொண்ட காதலால் கவிதை கதை எழுதுவது
புனை பெயர் ..கலையடி அகிலன் <>கவி நிலவன் ,.<>அகிலன் ராஜா
உன் வரவை உரசிப்பார்க்கிறது
உள்ளத்தில் வந்த காதல் அன்பு
உலகமும் விடியவில்லை உறவும் முடியவில்லை
உள்ளத்தின் மலருக்கு உரமாகி போனது
உயிரான காதல்
நெஞ்சில் உன் நினைவுகளோடு பதின்மூன்று ஆண்டுகள்
நெஞ்சை பற்றவைத்து பரிதவிக்கவிடும் இனிமை நினைவுகள்
உதிராமல் உறைந்து நின்று கொல்லுதடா ....
ஆயிரம் கனவுகளுடன் கனடாவில் புகுந்தாய்
அயராமல் உழைத்து உறவை காத்தாய்
பண்பாய் பழகி உறவுகளை சேர்த்தாய்
பாசமாய் உறவாடி உரிமை கொண்டாய் ......ரூபா
காலமெல்லாம் எமக்கு கடவுளாய் உயிர் வாழ்ந்து
கனியெல்லாம் தந்துவிடும் - உன் காலம்
விண்ணோடு சென்றுவிட்டாலும்
கண்ணில் இருந்து மறைந்து விடாது
மலர் சூடி போற்றி துதித்து .இறைவனின் இருப்பிடத்தில்
நீ உறைந்து இளைப்பாறவே
இறைவனுடன் இரந்து நிற்கின்றோம்
அன்பான உடன்பிறப்புகள்
(அகிலன்)
இந்த கொடிய இரவின்
கிளைகளில்
ஒரு ராக்குருவியைப்போல்
அமர்ந்திருக்கிறேன்.
நினைவுகளை
கொத்திக் கொத்தி தின்று
நெஞ்சடைக்கும்போதெல்லாம்
என் கண்ணீரையே
நான் குடிக்கின்றேன்.
என்றோ என் மனச்சிறகில் தைத்த அன்பென்ற
முள்ளொன்று
நினைவு என்ற காயங்களை ஆற விடாமல்
கிளறிகொண்டே இருக்கிறது.
வலிகள் பழகிப்போன எனக்கு
காயங்களைப் பற்றி கவலை
இல்லைதான்.
இருந்தும்
இவ் நினைவுகளை விழுங்கி
செரிக்க வைக்க
இன்னும் எத்தனை இரவுகள்
நான் ராக்குருவியாய்
விழித்துக்கொண்டிருக்க
வேண்டுமோ?
காதல் மேகம்
***********
காதல் செய்யும் கருமை மேகம்
காலை மாலையென கட்டுண்டு இருக்கிறது --அது
கோவம்கொள்ள விருப்பமின்றி பெரும்மழையை பெய்கின்றது
மொட்டென மனம் பேசாது இருந்தாலும்
பெருகும் ஆர்வமும் கொப்பளித்து நிற்கிறது
மனசெல்லாம் வசந்தகளை தட்டிவிட்டு
மலரான கனவுகளையும் மலர்ந்துவிட செய்கிறது
கவி அகிலன் ராஜா
நிலமகளோ
அருமை கனவொன்றை அழகுடன் காணவே
அழகு மதியும் ஆனந்தா மழை சிந்துகிறாள்
கனவுதனை மறந்து கற்பனையில் ஓடவே
அலைபோல அன்பையும் அசைந்திட கேட்கிறாள்
தனிமையில் வாடி இருந்தாலும்
இவள் யாரோ மனதினையும் மகிழ்வாக்கிறாள்
இதய பூவையும் இனிமையாக விரிக்கிறாள்
உரிமை விளைக்கையும் உன்னதமாய் தந்தே
எரியும் ஒளியையும் காண செய்கிறாள் --இவள் யாரோ
மெல்ல வந்து எட்டி பார்த்து
மன்னவனின் மெல்லிய மனதையும் கிள்ளியே
மாலை போடா வந்த நிலமகளோ
கவி அகிலன் ராஜா
தனிமை
***********
தனிமை தந்திட்ட
-- தன்னகம் கொண்டே
தலைசிறந்த தலைவர்கள்
---தலைநிமிர்ந்து வாழ்ந்தனர்
தனிமையின் காட்டிலே
----தயாராகவே இருக்கவே
தினமும் நிலவெனவே
---நீயும் வளர்ந்திடுவாய்
தனிமை விதையிலே
----தன்னம்பிக்கையை ஏற்றுகொள்
தனிமையும் கவலையோடு
----தற்கொலை புரியாது
தனிமையும் கொள்
--தன்னிலையை அறியவே
திறமுடனே முயற்சி
---நித்திரையின்றி விழித்துக்கொள்ளும்
தனிமை
***********
தனிமை தந்திட்ட
-- தன்னகம் கொண்டே
தலைசிறந்த தலைவர்கள்
---தலைநிமிர்ந்து வாழ்ந்தனர்
தனிமையின் காட்டிலே
----தயாராகவே இருக்கவே
தினமும் நிலவெனவே
---நீயும் வளர்ந்திடுவாய்
தனிமை விதையிலே
----தன்னம்பிக்கையை ஏற்றுகொள்
தனிமையும் கவலையோடு
----தற்கொலை புரியாது
தனிமையும் கொள்
--தன்னிலையை அறியவே
திறமுடனே முயற்சி
---நித்திரையின்றி விழித்துக்கொள்ளும்
செவப்பி 3
==========
சரி.. இப்ப ரகுவோட வீட்டுக்கு வருவோம்..
செவப்பிங்கற பேரைக் கேட்டதுமே அதிர்ந்து போயிருந்தாங்க பார்வதியம்மா..
திரும்பத் திரும்ப எதுக்காக என்னதுனு ரகுகிட்ட கேட்டுப் பார்த்தும், அவன் ஒரு தெளிவான பதிலே தரல..
பிறந்தநாள் கொண்டாட வந்திருந்த ரகுவோட அக்கா ஷோபா குடும்பமும், அவங்க ஊருக்கு கிளம்பிப் போயிட்டாங்க..
ரூபா வழக்கம் போல காலேஜுக்கு போயிட்டு வந்துட்டு இருக்கறா..
இன்னைக்கு நைட்டு மறுபடியும் சென்னைக்கு கிளம்புகிறான் ரகு.. லீவு முடிஞ்சு போச்சு..
துணிமணி எல்லாம் எடுத்து வச்சுட்டு கெளம்பிக்கிட்டே இருந்தான்..
பின்னால போயி நின்னா பார்வ
வாழ்க்கை ஒரு அழகிய வரம்
வசந்த காலம் செம்மையான கற்பகம்
வண்ணமாக பிடித்துவிட்டால்
அழகு கொள்ளும்
வஞ்சனையோடுபிடித்துவிட்டால்
வெறுப்பு சேரும்
வாழ்வும் துதிப்பார் அதுவாய் வாழ்வார்
வாழ்ந்துதான் பாரு மண்ணோரம் பலகதைப்பேசும்
==========€€€€€€€€€€€€€
பல்லவி
========
காக்கும் கணநாதா உன் உன் உன்
பாதம் பணிந்திடவே
காக்கும் கணநாதா உன் உன் உன்
பாதம் பணிந்திடவே
ஓடோடி வந்தேன்
ஓடோடி வந்தேன்
என்னுயிர் பாலகனே பாலகனே என்னுயிர் பாலகனே
நீ நீ நீ .தயைபுரிவாயே நீ நீ நீ .தயைபுரிவாயே
காக்கும் கணநாதா ஆ.. ஆ...அ பாதம் பணிந்திடவே
அனுபல்லவி
===========
காக்கும் கணநாதா வா வா வா அல்லல் தீர்த்தாண்டவா
வரமொன்று தந்து வா வா வா
வந்த நோய் விலக்கா
காக்கும் கணநாதா நாத நாத நாத
கருணை வாசனே
சரணம்1
==========
நோயின் பிடியில் அகப்பட்டு
நொடிந்து போனாரே
அருள்வேண்ட வந்தேனே
தந்தருள்வாய் கணநாதா
நோயின் பிடியில் அகப்
நீயே வா நதியே வா
================
நீயே வா நதியே வா//
துன்பங்கள் பறந்திட ஓடி வருவாய//
வாடிய நிலத்தை பசுமையாக்கி/
சுழலும் மனதை உறுதி ஆக்கி//
விளையும் பயிரை பிரகாசம் செய்ய //
வாழ்வெல்லாம் உனை அர்ச்சிக்க//
மகிழ்வை தந்து போவாய//
என ஏங்கி நிற்கையிலே //
நதியே நீ தூர விலகி நின்று /
எங்களை கவலை கொள்ள வைப்பது ஏனோ //
உன் நிலை கதிரவனின் கரங்களால்
கலைந்திடுமோ//
விவாசாயின் கனவுகளையும் சிதைத்திடுமோ//
பெரும் இருள் வந்து எம் வாழ்வை
மாற்றி விடுமோ //
எங்கள் விவசாய வாழ்வும் கணமாய் போய்டுமோ //
நதியே நீயும் பொங்கியே வந்து விடு
நாங்கள் உன்னை காத்துவிடுவோம்
உயிர் மூச்சாய் என் காதல் //
உன் மீது படிந்த போதும்//
உணர்வின்றி புறம்தள்ளி போகையில்//
மனம் வேதனையில் கண்ணீரை உண்டாக்குதடி