மனச்சிறகில்…

இந்த கொடிய இரவின்
கிளைகளில்
ஒரு ராக்குருவியைப்போல்
அமர்ந்திருக்கிறேன்.

நினைவுகளை
கொத்திக் கொத்தி தின்று
நெஞ்சடைக்கும்போதெல்லாம்
என் கண்ணீரையே
நான் குடிக்கின்றேன்.

என்றோ என் மனச்சிறகில் தைத்த அன்பென்ற
முள்ளொன்று
நினைவு என்ற காயங்களை ஆற விடாமல்
கிளறிகொண்டே இருக்கிறது.

வலிகள் பழகிப்போன எனக்கு
காயங்களைப் பற்றி கவலை
இல்லைதான்.

இருந்தும்
இவ் நினைவுகளை விழுங்கி
செரிக்க வைக்க
இன்னும் எத்தனை இரவுகள்
நான் ராக்குருவியாய்
விழித்துக்கொண்டிருக்க
வேண்டுமோ?

எழுதியவர் : akilan raja (21-Feb-23, 9:28 am)
பார்வை : 234

மேலே