பெரும் திரள் கூட்டம்
யாருய்யா வடக்கு மாவட்டச் செயலாளர்?
@@@@
நாந்தாணுங்க நடனராஜன்.
@@@@@
நாளைக்கு உங்க மாவட்டத்துக்கு
அண்ணன் பரப்புரை செய்ய வர்றாரு. அவர்
வெளில வரமாட்டாரு. இறக்குமதி
செய்யப்பட்ட எல்லா வசதிகளும் உள்ள
குளிர்சாதன வாகனத்தின் உள்ளே இருந்து
கொண்டே பிரச்சாரம் செய்வார். அந்த
பேருந்து அளவு நீளமான வாகனத்தின்
மேல் நான்கு திசையயும் நோக்கி நான்கு
பெரிய திரைகள்
கட்டபட்டிருக்கும்..இறக்குமதி செய்யப்பட்ட
திரைகள். கடுமையான வெயிலில்கூட
நமது அண்ண்ன் பேசுவது திரையரங்கு
திரையில் தெரிவது போலத் தெளிவாகத்
தெரியும்.
@@@@@@@
நான் என்ன செய்யணுமுங்க?
@@@@@@@@
நீ இரண்டாயிரம் பேருக்குப் பணம்,
பிரியாணிப் பொட்டலம், தண்ணீர் பாட்டில்
அத்துடன் தலைக்கு ஐநூறு ரூபாய்
கொடுத்து கூட்டி வரணும். அவர்களில்
ஐநூறு பேர் தலைவரின் வாகனத்தின்
நெருக்கமாக
பின்னால், ஐநூறு பேர் வாகனத்திற்கும்
முன்னால் நெருக்கமாக வாகனத்தை
ஒட்டியும், ஐநூறு பேர் வாகனத்தின்
வலப்புறத்திலும் மீதி ஐநூறு பேர்
வாகனத்தின் இடப்புறத்திலும் ஆமை
நடையுடன் நடந்து வரவேண்டும்.
வாகனமும் ஆமை வேகத்தில் ஊர்ந்து
செல்லும். நூறு அடி தூரத்தைக் கடக்க
அரை மணி நேரம் எடுத்துக்
கொள்ளவேண்டும்.
@@@@@@@
எதுக்குங்க இது மாதிரி நகர்வு.
@@@@@@@@
இரண்டாயிரம் பேரை இரண்டு லட்சம்
பேராகப் வீடியோவில் படம் பிடிப்பார்கள்.
கூட்ட நெரிசலில் தலைவரின் வாகனம்
செல்ல முடியாத நிலை ஏற்பட்டது போலக்
காட்ட வேண்டும். இருபது நிமிடத்தில்
பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தைச்
சென்றடைய ஆகும் நேரத்தை நாம்
இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்ள
வேண்டும். வாகனத்தின் நான்கு
புறத்திலும் வரும் தொண்டர்களில் சிலர்
மயக்கமடைந்து விழுவது போல நடிக்கச்
சொல்ல வேண்டும். இப்படி எல்லாம்
செய்தால் தான் நம் கட்சியில் மூன்று கோடி
உறுப்பினர்கள் இருப்பதாக நான்
நாளிதழ்களுக்குப் பேட்டி கொடுக்க முடியும்.
தலைவர் என்றுமே நிருபர்களைச்
சந்திக்கமாட்டார். 200 தொகுதிகளுக்கு
மேல் வெற்றி பெற்றபின் 200 உயர அடி
மேடையில் பதவி எற்றுக் கொள்வார்.
இன்றைய கூட்டத்தைப் பற்றி ஊடகங்கள்
நமது பெரும் திரள் கூட்டம் பற்றி
விவாதங்கள் நடத்துவார்கள். அதற்குத்
தான் இந்த ஆமை நகர்வு வாகனமும்
தொண்டர்கள் நகர்வும். இன்னும் ஒன்றை
நாம் செய்ய வேண்டும். அது என்னன்னு
சொல்லு பார்க்கலாம்.
@@@@@
நினைவு இல்லீங்க ஐயா.
@@@@@@
இதெல்லாம் தெரியாம நீ மாவட்டச்
செயலாளர். யோவ் பொதுச் சொத்துக்கு
சேதம் விளைவிக்க சிலரை ஏற்பாடு
செய்திட்டயா?
@@@@@@@
அது நம்ம கட்சிக்கு வழக்கமானது
தானுங்க. அதுக்குத் தான் ஒரு குழுவே
அமைச்சு தகுந்த
பயிற்சிவ்கொடுத்திருக்கிறோமோ.
@@@@@@
ஆமாம், ஆமாம். நான் உன்னைச்
சொதிக்கத் தான் இதைக் கேட்டேன்.
விடலைப் பையன்கள் அணி தயார்
நிலையில் இருக்கிறாங்களா?
@@@@@@@
அவுங்களுக்கு மூணு நாளாச் சாப்பாடு
போட்டு என்னோட அரிசி அறவை மில்லில்
தான் தங்க வைத்துள்ளேனுங்க ஐயா.
@@@@@@@@
நீ அதிர்ச்சிட்டசாலி தம்பி. நீ எனக்கு ஐம்பது
லட்சம் தந்து மாவட்ட செயலாளர் பதவியை
வாங்கினாய். மற்றவங்களுக்கு எல்லாம்
ஒரு கோடி.
@@@@@@
சரி, சரி. நீ போயி நாளைய ஊர்வலத்துக்கு
வேண்டிய ஏற்பாடுகளைக் கவனி.

