கப்பார்

துவக்கப் பள்ளி மாணவர் சேர்க்கை
###################################

ராமையா அடுத்த மாணவனையும் பெற்றோரையும் அனுப்பபு.

@@@@@

வணக்குமங்க ஐயா.

@@@@@

வணக்கம், வணக்கம். எங்கிருந்து வர்றீங்க?

@@@

அனுப்பன்பளையத்திலிருந்து வர்றமுங்க ஐயா.

@@@@@@

பையனோட

பிறப்பு சான்றிதழைக் கொடுங்க.

(சான்றிதழைப் பெற்றபின்) பையன் பேரு 'கப்பார்'. இந்திப் பேரு

மாதிரி இருக்குது.

@@@@

ஆமாங்க ஐயா. பையனுக்கு எங்க குடும்ப சோசியர் வச்ச

பேருங்க ஐயா. ஐமபது வருசத்துக்கு முன்னாடி 'சோலே'

(ஷோலே) -ன்னு ஒரு இந்திப் படம் வந்துதஉங்களாம். அதில

'கப்பார் சிங்' ஒருத்தரு பேருங்களாம். 'கப்பார்'-க்கு அருமையான

பல அர்த்தம் இருக்குதுங்களாம். எங்க ஊரில யாருக்கும் அந்தப்

பேரு இல்லீங்களாம். அந்தப் பேரை எங்க பையனுக்கு

வச்சுட்டாருங்க.

@@@@@@@

சபாஷ். இப்ப்டி இந்திப் பேரைக் குழந்தைகளுக்கு

வைக்கிறவங்க தான் உண்மையான தன்மானம் உள்ள

தமிழர்கள். உங்களை நெனச்சா எனக்குப் பெருமையா

இருக்குதுங்க. எங்க பள்ளில ஐநூறு குழந்தைகள் படிக்கிறாங்க.

அதில ஒரே ஒரு பையன் பேரு மட்டும் தான் தமிழ்ப் பேரு. அவன்

பேரு 'தமிழரசன்'. அவன் தமிழ்ப் பையன் இல்லை. ஒரு பஞ்சாபி

பையன். அவனோட அப்பா ஆயிரத்து முன்னூற்று முப்பது

திருக்குறலையும் பொருளோடு பிழையில்லாமல் கிடுகிடுன்னு

சொல்லிப் பெருமைப்படறாரு.

நீங்க உங்க பையனுக்கு 'கப்பார்'னு இந்திப் பேரை வச்சு

மற்ற

தமிழர்களுக்கு நல்ல முன்னுதாரமா இருக்கிறீங்க. வாழ்த்துகள்.

சரி நீங்க இரண்டு பேரும் இங்க கையெழுத்துப் போடுங்க.

ராமையா இந்த 'கப்பார்'ஐ முதல் வகுப்பு 'ஓ' பிரிவுக்க்கு

கூட்டிட்டு போ.

@@@@@@@@@@

சரிங்க ஐயா.

@@@@@@@@@@

சரி நாங்க வர்றமுங்க ஐயா.

############

சரி. போயிட்டு வாங்க.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கப்பார் = "Gabbar" (गब्बर) means ‘proud, haughty, arrogant, or strong’. It can also refer to ‘a person who is wealthy or prosperous and is sometimes associated with indolence’

எழுதியவர் : மலர் (20-Sep-25, 7:51 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 25

மேலே