நீயே வா நதியே வா
நீயே வா நதியே வா
================
நீயே வா நதியே வா//
துன்பங்கள் பறந்திட ஓடி வருவாய//
வாடிய நிலத்தை பசுமையாக்கி/
சுழலும் மனதை உறுதி ஆக்கி//
விளையும் பயிரை பிரகாசம் செய்ய //
வாழ்வெல்லாம் உனை அர்ச்சிக்க//
மகிழ்வை தந்து போவாய//
என ஏங்கி நிற்கையிலே //
நதியே நீ தூர விலகி நின்று /
எங்களை கவலை கொள்ள வைப்பது ஏனோ //
உன் நிலை கதிரவனின் கரங்களால்
கலைந்திடுமோ//
விவாசாயின் கனவுகளையும் சிதைத்திடுமோ//
பெரும் இருள் வந்து எம் வாழ்வை
மாற்றி விடுமோ //
எங்கள் விவசாய வாழ்வும் கணமாய் போய்டுமோ //
நதியே நீயும் பொங்கியே வந்து விடு
நாங்கள் உன்னை காத்துவிடுவோம்