காவிரித்தாயே

யார் என்ன சொன்னாலும்
அணை போட்டு தடுத்தாலும்
அங்கேயே நின்றிடலாமோ?
குடகு மலையில் பிறந்தவளே
காவிரித்தாயே
உம் பிள்ளைகளைக் காண
ஓடோடி வாராயோ?

உழவுக்கு உதவிடவே
ஊர்ந்து நீ வந்திடுவாய்!
தாகத்தில் தமிழ்நாடு
தவழ்ந்து நீ வந்திடுவாய்!
பசுமை எங்கும் பரவிடவே
பாய்ந்து நீ வந்திடுவாய்!

மனிதநேயம் மறந்துபோச்சு
நீதி இங்கே செத்துப்போச்சு
ஒன்றுபட்டு உரக்க
கத்துகின்றோம்
ஒருவனும் காது கொடுத்து
கேட்கவில்லை
ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு
காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க ஆளுமையில்லை
காவிரித்தாயே எங்களின்
கூக்குரல் உன் காதிலும்
விழவில்லையா?
தடைகளை உடைத்து
பாய்ந்து வர மனமில்லையா?

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (8-Apr-18, 4:15 pm)
பார்வை : 124

மேலே