சிலிர்த்த மனமும் அமைதியுறும்
வடிவில் குறைந்து வளரும் நிலவு
***வனப்பா யிரவில் ஒளியைக் கொடுக்கும் !
விடியும் வரையில் விரிந்த விசும்பு
விளங்கு மழகில் வியப்பை யளிக்கும் !
இடியும் முழங்கப் பொழியும் மழையில்
***இதயம் நனைய உவகை பிறக்கும் !
செடியில் தவழும் வளியும் வருட
***சிலிர்த்த மனமும் அமைதி யுறுமே !!
சியாமளா ராஜசேகர்