ஆண்டவனின் குறும்பு
ஆண்டவனின் குறும்பு
.
அழகி அவள்!
ஆடவரை மயக்க
பிறந்த பேரழகி அவள்.
கார்முகிலை அவள்
தலையில் சூட்டி
கயல் மீன்கள்
இரண்டு கொடுத்து
மாயப் புன்னகையை
அவள் உதட்டில் பூசிய
ஆண்டவன் யாரை
நினைத்தானோ!
குன்றுகள் இரண்டு
அவள் மார்பில் செதுக்கி
இடையின் கீழ்
வாழைக் கன்று
இரண்டு நட்டு
மேனியெல்லாம்
சந்தனம் பூசி
அல்லிக் கொடியென
அசையவிட்டான் பார்
பாவி அவன்!
பார்த்து ஆடவர்
எல்லாம் மனம் மயங்க
ஆண்டவன் செய்த குறும்பு இது.
சண்டியூர் பாலன்.