கங்கை என்னும் புனித நதி
எங்கிருந்தோ வந்து கலக்கும் கழிவுநீர்
அரைவேக்காட்டில் மிதந்து போகும் பிணங்கள்
மலர் மாலைகள்..... அதோ....அதோ ...அங்கு
கரையோரம் சில பெண்டிர் அகல் விளக்குடன்..
கங்கா மாதாக்கி ஜெய்....என்று கோஷம் எழுப்பி
விளக்குகளை மிதக்கவிட.....அங்கோர் பொலிவு ...தெய்வீகம் ..
நல்லவை, தீயவை என்று பாகுபாடு இல்லாது
எதையும் தாங்கும் இதயன் கங்கை நதிக்கு !
தீயவை உள்வாங்கி....நல்லவை வெளிக்கொணரும்
புனித நதியல்லவோ .....தாய் கங்கை நதி...
தாயல்லவோ நதியும்
எதையும் தாங்கும் இதயம்
வாழ்க....நீடுழி....அன்னை கங்கையே ...