அழகே அழகு

புள் வெளியின் பசுமை பரப்பும்
புத்துணர்ச்naவழங்க

மரங்கள் விரிந்து படர்ந்த நிற்கும்
திறனை இறுமாப்பை கொடுக்க

பூக்கள் மலந்து குலுங்கும் அழகு
ஒரு பூரிப்பை நல்க

காய்கள் காய்த்துக் கொத்து கொத்ததாக
தொங்கும் காட்சி பெருமிதத்தை அளிக்க

பழங்கள் கணித்து செம்மையாக
காட்சியளிக்க மனம் கொள்ளையில்லா

இன்பம் பயக்க கண்ணில் நீர் மல்க
இயற்கையின் பெருமையை

கை கூப்பித் தொழுகிறேன்
என்னே அழகு கொள்ளை அழகு

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (22-Feb-25, 7:27 pm)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : azhage alagu
பார்வை : 42

மேலே