ஒய்யாரமாய் மலர்கள்

அழகிய மலர்களின்
அற்புத வண்ணமதை
நாடிவரும் எண்ணங்கள்
நறுமணமோ கவர்ந்திழுக்கும்
காந்தமென தன்னகமும்

தாவி வரும் வண்டுகளும்
வண்ணங்களை கொண்டுலவும்
வண்ணத்து பூச்சிகளும்
ஒயிலாக நடமாடும்
நளினமிகு மங்கையரும்
கூடிவிளையாடும் குழந்தைகளும்

வண்ணக் கலவைகளில்
வாசமிகு பூக்களைத்தான்
வாஞ்சையுடன் வாரி எடுத்து
தலையினிலே சூடிடவே
ஆகா என்ன அழகு என்னே அழகு /
என்ன கொண்டாட்டம்

ஆண்டவன் படைத்திட்ட
ஆனந்தம் ஆனந்தம்
மலர்களே மனங்கவரும் அழகிய
படைப்புகளில் ஒய்யாரமாய்..

எழுதியவர் : பாத்திமா மலர் (19-Feb-25, 11:36 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : oyyaramai malarkal
பார்வை : 11

மேலே