மல்லிகை மொட்டு மனசை மெல்லத் தொட்டு

மல்லிகை மொட்டு மனசைமெல் லத்தொட்டு
சில்லென்று பூத்துச் சிலிர்த்து சிரிக்குது
தென்றலில் ஆடியே தேனினைச் சிந்துது
மின்னல் விழியை வரவேற் குதுமகிழ்ந்து
புன்னகையால் மௌனத்தில் பூபாளம் பாடுது
பின்னலில் பூவைநீ சூடு

----இரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (11-Feb-25, 10:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே