ஒற்றைச்சிறகு

அந்தோ என் வாசலில்
விடிகாலை ஒளியில்
தவறிவிழுந்ததோர் ஒற்றைச்சிறகு.

நிறங்கள் செறிந்து
அரும்பாய் முளைத்த
மீசையைப்போல்
இருமங்கிலும் முடிகள்

மேகத்தை தரையில்
கொட்டியது போல்
பனிமூட்டம்
காற்றெங்கும் புகைச்சல்
அவ்வேளை

வானம் நோக்க
எங்கும் நிச்சலனம்
எங்கோ
ஓர் பறவையின்
விம்மல்

கண்ணில் தென்படா
ஒரு பறவையின் நிழல்
என்மீது அசைந்தபடி
இருக்கின்றது..

எழுதியவர் : S.Ra (10-Feb-25, 11:23 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 56

மேலே