Ravichandran - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Ravichandran |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Oct-2019 |
பார்த்தவர்கள் | : 811 |
புள்ளி | : 168 |
அந்தோ என் வாசலில்
விடிகாலை ஒளியில்
தவறிவிழுந்ததோர் ஒற்றைச்சிறகு.
நிறங்கள் செறிந்து
அரும்பாய் முளைத்த
மீசையைப்போல்
இருமங்கிலும் முடிகள்
மேகத்தை தரையில்
கொட்டியது போல்
பனிமூட்டம்
காற்றெங்கும் புகைச்சல்
அவ்வேளை
வானம் நோக்க
எங்கும் நிச்சலனம்
எங்கோ
ஓர் பறவையின்
விம்மல்
கண்ணில் தென்படா
ஒரு பறவையின் நிழல்
என்மீது அசைந்தபடி
இருக்கின்றது..
வெளிச்சங்கள் கரைந்து
மலர்ந்த இரவொன்றில்
உன்னைக் காண வருகின்றேன்
நறுமணத்துடன் கூடிய
பூக்களை கையில்
ஏந்திக்கொண்டு
துண்டாகி போன
நிலவின் வெளிச்சத்தில்
முகம் சோர்ந்து காத்திருக்கிறாய்
வாசலை அடைகையில்
விழித்திறக்கும் பார்வையில்
ஆயிரம் மின்னல்கள்
ஆயினும் கோபங்கள்
கசங்கிய மலரை
கையில் கொடுக்கையில்
வாய்திறந்து கூறினாய்
"மலர்கள் வாடினவே"
இரவுகள் மீதமிருக்கும்
உன் விரல்களில்
நறுமணங்களாகவே
இந்த பூக்களும்
மலர்ந்தனவென்பதை
நீயறியாயோ அன்பே?
இறந்த மீனின்
வாயில்
துடித்துக்கொண்டிருக்கும்
மண்புழுக்கள்
கிள்ளியெறிந்திடவும் முடியாமல்
சொல்லியழுதிடவும் முடியாமல்
நெஞ்சில் நிழலாடிப்போகிறது - அவளின்
நீர்த்துப்போன நெருக்கங்கள்!
புன்னகைபூத்த சிரிப்புகள்
பூகம்பமாய் வெடிக்குது
போனவளின் புருவவிழிகள் -என்னில்
போரொன்றை தொடுக்குது!
ஈருடல் ஓருயிராய்
இரவுகளின் நீண்டகதை
இதயத்துடிப்பை நிறுத்தி - எழுதுகிறது
ஏக்கங்களின் சோகமதை
என்னவளின் சிதையை
எரிதழல் ஏந்திச்செல்ல
ஏகாந்த நினைவுமட்டும்
என்னையே எரிக்குது
என்னோடே வாழ்கின்றாள்
என்கின்ற நிதர்சனமிருக்க
மரணதேவன் வரும்வரையில்
மங்கையவள் நினைவு எதற்கு?
ப்ரியாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.மணி பர்ஸை மறந்து வீட்டில் வைத்துவிட்டு, இப்போது பேருந்து இருக்கையில் சுமார் பத்து நிமிடமாக பயணித்து கொண்டிருக்கிறாள்.பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.இல்லையென்றால் கண்டக்டர் அவளை இந்நேரம் துரத்தி இருப்பார்.எப்படியாவது அலுவலகத்திற்கு சென்றுவிட்டாள் போதும், சுமதியிடம் திரும்பி வருவதற்கான தொகையை பெற்றுக் கொண்டாள் ஆச்சென நினைத்தாள்
ஒவ்வொரு தடவை கண்டக்டர் டிக்கெட் கேட்கும் பொழுதும் இவளையே பார்ப்பது போலிருந்தது.அவரை தவிர்க்க இப்பொழுது காதில் ஹெட்செட் போட்டுக் கொண்டாள்.பார்வையை அதன் பின் அவர் பக்கம் முடிந்த மட்டும் திருப்பாமல் பார்த்துக் கொண்டாள்.கூட்ட
அப்பாவுக்கோ
நட்சத்திரம்
பொறுக்க
முடியாத
பொட்டுக்கடலை...
அந்த இருளில் மூழ்கிய படியே கார் சென்றுக் கொண்டிருந்தது.
காரை ஓட்டிக்கொண்டிருந்த தியாவிடம்
எங்க தியா போறோம்
அவள் மௌனமாக இருந்தாள்
எதாவது சர்ப்ரைஸா
அப்படித்தான் வச்சுக்கோயேன்
இரவின் அசைவில் கார் காற்றை முகத்திலறைந்தவாறே சென்றுக் கொண்டிருந்தது.
தியா குவிந்த கவனத்தோடு காரினை செலுத்திக் கொண்டிருந்தாள்.
நான் மூக்குக் கண்ணாடியை கழட்டி என் சட்டைப் பாக்கெட்டில் வைத்து கண் அயரத் தொடங்க, தவழும் தென்றலோ என் தலைமுடியை கோதிக் கொண்டிருந்தது.
என் எண்ண ஓட்டங்களின் முன் தியா விரிந்தாள்.
தியாவின் அப்பாவும் என் அப்பாவும் நெருங்கிய தோழர்கள்.அதனால் சிறு வயதிலிருந்தே தியா எனக்கு நெருக்க
உறங்கிய குளத்தில் விழுந்த
சிறிய கல் போல...
என் செவிபட உன் பெயரை, யாரேனும் உச்சரிக்கையில்
என் நினைவுகளின் நரம்புகள் வழியே
உன் பிம்பங்கள் நீந்தியபடியே இருக்கின்றன...
நிர்வாணமான கண்ணாடி குவளையில்
உடுத்திக் கொண்டிருந்தது
பால் தன் ஆடையை...