மனநிறைவு 2

மருத்துவமனையை அடைந்த சேகர் தான் கொண்டு வந்த பர்சை அவரிடம் கொடுத்தான்.மெல்லிய புன்னகையோடு அதைப் பெற்றுக் கொண்ட பாலு "ரொம்ப தாங்க்ஸ் சேகர் ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கியா நான் ஏடிஎம் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்" அவர் விடைபெற்று சென்றதும் அருகிலுள்ள நாற்காலியில் சென்றமர்ந்தான்.

வழக்கமான பரபரப்போடு மருத்துவமனை இருந்தது.கால்கள் நடந்து கடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.அப்பொழுது பின்புறம் குரலெழ திரும்பினான்.அங்கே காலையில் மயக்கம் போட்டு விழுந்த அப்பெண்ணைக் கண்டவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

பாரதியும் எதிர்பாராமல் அவனை அங்கு கண்டதும் அதிர்ந்து தான் போனாள்.காலையில் அவளைத் தேடி ஓடிவந்தவன் கையில் எதையோ வைத்துக் கொண்டு அவளை அழைக்க எதிர்பாராமல் அவள் திரும்ப அவன் கை எதேச்சையாக உரசியதில் கோபம் கொண்டு அவனை அறைந்து  விட்டாள்.

பட்ட அடியில் அவன் சிவந்த கன்னத்தோடு கையிலிருந்த அவள் ஊக்கை காட்டியதும் கூச்சம் உடலில் பரவியது.மார்பருகே கிழிந்திருந்த பகுதியில் அந்த ஊக்கை குத்திவைத்திருந்தாள்.அதைக் கொடுக்க தான் அவன் வந்திருக்கிறான் என்பதையறிந்து கலங்கினாள்

அவனே அதை அவள் கையில் வைத்து விட்டு பின் நகர்ந்த போது அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.உடுத்திய உடைகளை கண்களால் அவிழ்க்கும் சில ஆடவர்கள் மத்தியில் தன் கிழிந்த உடையில் தெரிந்த உடலை மறைக்க முயன்ற அவன் நல்லெண்ணத்தால் அவள் மனம் தன் செயலுக்காக வெட்கி தவித்தது.அவனை அழைத்து மன்னிப்பு கேட்க மனம் ஏக்கமுற்றது.ஆனால் வழிமறுத்து அவள் தந்தை அவள் அணிந்திருந்த செயினை பறித்துச்செல்ல வெட்கமுற்று ஒன்றும் பேசாது திரும்பிவிட்டாள்.இப்பொழுது மீண்டும் அவனைக் கண்டதும் அவள் மன்னிப்பை கண்ணீராக கொட்டி தீர்த்தாள்.அவளை எப்படி சமாதானப்படுத்துவது எனத் தெரியாமல் சேகர் தவித்துக் கொண்டிருந்தான்.பெண்கள் அழுவது அவனுக்கு ஒருபோதும் பிடிக்காது.நேரம் கடத்தி அவள் அழுது முடித்தாள்.

"இப்ப எதுக்கு அழுவறிங்கனு தெரிஞ்சுக்கலாமா"

"உங்கள புரிஞ்சுக்காம என் மேல உங்க கைப்பட்டதும் சட்டுனு யோசிக்காம அறைஞ்சுட்டேன். ஆனா நீங்க எனக்கு உதவி பண்ண தான வந்திருந்திங்க"

"அத நான் அப்பவே மறந்துட்டேங்க. ஆனா உங்கள வழிமறிச்சு உங்க அப்பா பண்ண செயலைதாங்க என்னால மறக்கமுடியல.
அவரு உங்க அப்பா தானா?"

"ஊர் உலகத்த பொறுத்தவரைக்கும். ஆனா உண்மைய சொன்னா நான் ஒரு அனாதை"

"என்ன சொல்றீங்க"

"எங்க அம்மாக்கு இரண்டு புருசன்.முதல் புருசன அம்மா கல்யாணமான முதல் மாசமே சாலை விபத்துல பறிகொடுக்க, நெருங்கின சொந்தம் மூலமா இவர ரெண்டாவது கல்யாணம் பண்ணீட்டாங்க.
குடும்ப கஷ்டத்துக்கு வேறவழியில்லாம மாமி வீட்ல வேலைக்கு சேர்ந்தேன். அவங்களுக்கு தான் இன்னிக்கு எதிர்பாராம மாரடைப்பு வந்துடுச்சு"

"நீங்க என்ன படிச்சிருக்கிங்க"

"நான் ப்ளூஸ் டு வரைக்கும் கவுர்மண்ட் ஸ்கூல படிச்சேன்.அப்புறம் மேற்கொண்டு படிக்க முடியாம வீட்டுலயே இருந்துட்டேன்.கொஞ்சம் கொஞ்சம் டைலரிங் கத்துக்கிட்டேன்"

அப்போது பின்புறம் குரலெழ இருவரும் திரும்பினர்.

"அப்ப நான் கிளம்பட்டுமா சார்? உங்க பெரியம்மா எப்படி இருக்காங்க"

"கொஞ்சம் கிரிட்டிக்கல் தான் சேகர்
ஐசியுல தான் இருக்காங்க.அவங்க பையனுக்கு தான் போன் பேசிட்டு வரேன் ராஸ்கல் அவங்கள அடக்கம் பண்ணிட்டு சொன்னா மொத்த செலவையும் என் அக்கௌன்ட்ல சென்ட் பண்றானாம். மத்தபடி லீவு கிடைச்சா எப்பவாச்சும் வரானாம் இப்ப அவனுக்கு டைம் இல்லையாம்.பணத்துக்கு தர மதிப்பு உயிருக்கு இல்லாம போச்சு சேகர்"

பாரதி அவர்களுக்கு ப்ளாஸ்க்கிலிருந்த காஃபியை ஊற்றிக் கொடுத்தாள்.அவர்கள் அதை பருகத் தொடங்கினர்

"சேகர் இன்னிக்கு உனக்கு வேற எதாவது அர்ஜெண்ட் வொர்க் இருக்கா"

"இல்ல சார். எதுக்கு"

"நான் கொஞ்சம் வீடு வரைக்கும் போயிட்டு ப்ரெஷப் ஆயிட்டு என் வைஃப அழைச்சிட்டு வந்துடறேன். அதுவரைக்கும் நீ இங்க இருக்க முடியுமா. பாவம் பாரதிக்கு அந்தளவு விவரம் தெரியாது"

"நீங்க போங்க சார் நான் பாத்துக்கிறேன்"

அவர் விடைபெற்று செல்ல, மழை வலுத்தது

"ஆமா நீங்க சாப்பிட்டிங்களா பாரதி. உங்க முகத்த பார்த்தா ரொம்ப டல்லா இருக்கு. கடைக்கு போய் எதாவது வாங்கி வரட்டுமா"

"இல்ல வேண்டாங்க. இப்ப தான்  சார் எனக்கு ஜீஸ் வாங்கி கொடுத்தாரு"  மழுப்பினாள்

"நீங்க பொய் சொல்றீங்கனு உங்க கண்ணுலேயே தெரியுது" பாரதி

"நானா? எப்படி?"

"பாலு சார் இன்னிக்கு அவரோட பர்ஸ
மறந்து ஆஃபிஸ்லயே விட்டுட்டு வந்துட்டாரு. அது கொண்டுவரதுக்குதான் என்னைய வரச் சொன்னாரு.எனக்கு பிடிச்சவங்க பொய்பேசறத நான் எப்பவுமே விரும்பமாட்டேன் பாரதி.இப்ப சொல்லுங்க நீங்க சாப்டிங்களா?இல்லையா?"

அவள் இட வலமாக தலையசைக்க, அவளை அழைத்துச் சென்று அருகிலிருந்த ஹோட்டலில் சாப்பிட வைத்தான்.அவள் விக்கலெழ சாப்பிட்டு முடிக்க, பில் பே செய்துவிட்டு இருவரும் மருத்துவமனை திரும்பினர்.

அவர்கள் உள் நுழைந்ததும் அவர்கள் வரவை எதிர்ப்பார்த்திருந்த நர்ஸ் ஒருத்தி

"ஏம்மா எங்க போய் தொலைஞ்ச? அந்த பாட்டிக்கு சுவாசம் கொஞ்சம் கொஞ்சமா கம்மியாயிட்டு வருது.பொழைக்க வாய்ப்பில்லைனு டாக்டர் சொல்லிட்டாரு.கடைசியா எதாவது பேசணும்னா சீக்கிரம் போய் பேசிடுங்க"

"நீங்க உள்ள போய் பாருங்க பாரதி நான் சாருக்கு போன் பண்ணி சீக்கிரமா வர சொல்றேன்"

அவள் அழுதவாறே உள்ளே சென்றாள்.
அவன் அலைப்பேசியை எடுத்து காதில் வைத்தான்.மழை நின்ற சாலையில் வெயில் பரவ, இரண்டு மாடுகள் அசைந்தபடி சென்றுக் கொண்டிருந்தன

தொடரும்...

எழுதியவர் : S.Ra (13-Jul-25, 10:20 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 12

மேலே