தீரா இரவுகள்

இயன்ற வரை
உன் பணிகளை
இனிதே முடித்துவா

என் அன்பே!

நான் பூக்களோடு
முகம் பொருத்தி
புன்னகையோடு
காத்திருக்கிறேன்

அடரும் இரவு
உருகி
பனித்துளிகளாய்
கரையும் வரை

நாம் பேசலாம்...

எழுதியவர் : S.Ra (8-Jun-25, 10:58 am)
சேர்த்தது : Ravichandran
Tanglish : theeraa iravugal
பார்வை : 98

மேலே