சாறு சாறு - என்ன சாறுடா

சாறு, சாறு, என்ன சாறுடா?
--------------------------------------------


எண்டா கடடப பையா....

@@@@@@@@

என்னங்க பாட்டி?

@@@@@@@@

எனக்கு வயசு தொண்ணூறு ஆகுது. எங்கம்மா சாறு காச்சினா

சோறு தின்னத் தின்ன தெகட்டாது. ஆமாம் நம்ம பக்கத்து வீட்டுள

அடிக்கடி 'சாறு, சாறு"ன்னு சொல்லறாங்களே அது என்ன சாறுடா

கட்டப் பையா? கறிச்சாறா, பருப்புச்சாறா, மொச்சக்கொட்டைச்

சாறா? புளிச்சாறா? இல்ல பழச்சாறா?

@@@@@@@@@@@@@

ஓ....குழம்புனு சொல்லறதைத் தான் சாறுன்னு சொல்லறீங்களா?

@@@@@@@@@@@

ஆமாண்டா சோத்துல ஊத்தித் தின்னறதைத் தான் சாறுன்னு

சொல்லுவோம். மொதல்ல சாத்தை சோத்துள்ள ஊத்தித்

தின்னுவோம். அப்பறம் தயிர் அல்லது மோரு ஊத்திப் சோத்தைப்


பெசஞ்சு தின்னுவோம். ஆமாம் பக்கத்து வீட்டுச் சாறு என்ன

சாறுடா கட்டை?

@@@@@@@@@@@@

அது இந்திச் சாறு பாட்டி.

@@@@@@@@@

இந்திச் சாறா? அது என்ன சாறுடா? இதுவரைக்கும் நான்

கேள்விப்படாத சாறா இருக்குது.

@@@@@@@@@@

பாட்டி அந்த வீட்டு அக்காவுக்குப் பெண் குழந்தை பொறந்து ஒரு

வாரம் ஆகுது. அந்தக் குழந்தைக்குச் 'சாறு'னு பேரு

வச்சிருக்குறாங்க. கொழந்தையைப் பாக்க வர்றவங்க எல்லாம்

'சாறு, சாறு'ன்னு அந்தக் கொழந்தை பேரைச் சொல்லிக்

கொஞ்சறாங்க.

@@@@@@@@@@@

அது என்ன சாறுடா கட்டப் பையா?

@@@@@@@@@

அது இந்திச் சாறு பாட்டி. நான் சொன்னதை மறந்திட்டீங்க பாட்டி.

'சாறு' இந்திப் பேரு.

@@@@@@@@@

'சாறு'*ன்னெல்லாம் பேறு வைக்கிறாங்களா?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

* நான் கொங்கு மண்டலத்தில் வளர்ந்தவன்1975 வரை. அங்குள்ள

கிராமப் ப்குதிகளில் 'சாம்பார்' என்ற சொல் அறிமுகம்

ஆகவில்லை. குழம்பு என்று நாம் இப்போது சொல்வதைத் தான்

சாறு என்பார்கள்..திரைத் தாக்கத்தால் இப்போது எல்லாம் மாறியிருக்கும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Charu (चारु) Charu means “graceful” or “delicate” in Sanskrit.

























எழுதியவர் : மலர் (14-Dec-24, 6:59 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 2

மேலே