பட்டப் பேரு வேணும்

சாலையில் கூட்டமாக மக்கள். நடுவில்

ஒருவன் நின்று கொண்டு கண்டபடி

திட்டிக் கொண்டிருக்கிறான். சிலர் அவனை

அடிக்கப் போகிறார்கள். அந்த சமயத்தில்

காவலர் ஆய்வாளர் வ்ண்டி வந்து

நிற்கிறது.

@@@@@@

என்னடா இங்க ரகளை?

@@@@@

ஐயா, இவன் சாலையில் நடந்து

செல்வோரைக் கண்டபடி திட்டுகிறான்.

@@@@@@@

யாருடா நீ? எதுக்கு ரகளை பண்ண்ற?

உள்ள தள்ளுணுமா?

@@@@@@

ஐயா என் பேரு ராஜா. எனக்கு

'ரகளை'ங்கிற பட்டப் பேரு வேணும்.

என்னைக் கைது பண்ணுங்க.

செய்தித்தாள்கள் அப்பறம்

தொலைக்காட்சிச் செய்திகளில் 'ரகளை

ராஜா கைதுனு செய்தி வரணும்.

@@@@@

எதுக்குடா இந்தப் பட்டப் பேரு?

@@@@@

ஒரு அரசியல் கட்சில பட்டப் பேருள்ள

ரவுடிகளுக்கு செய்தித்தாள் ஆதாரத்தைக்

கொடுத்தா அந்தக் கட்சில வட்டச்

செயலாளர் பதவி. பல ஆதாரங்களுடன்

தொலைக்காட்சி வீடியோ ஆதாரத்தைக்

கொடுத்தா மாநில அளவிலான பதவி.

தொலைக் காட்சி விவாதங்களில் கட்சியின்

செய்தித் தொடர்பாளராக் கலந்துக்கலாம்.

ஐயா என்னைக் கைது பண்ணி எனக்கு

வசதியான வாழ்க்கைக்கு உதவுங்க ஐயா.

என் உயிர் உள்ள் வரைக்கும் நீங்கள்

பணியாற்றும் பகுதிப் பக்கம் கனவில்கூட

ரகளை செய்யச் சத்தியமா வரமாட்டேன்.

@@@@@@

யோவ் கணபதி இவனை வண்டில

ஏத்தய்யா

@@@@@@@

தெய்வமே நீங்க நல்லா இருந்து உயர்

பதவிக்கு போக கடவுளை

வேண்டிக்கிறேன் ஐயா.

எழுதியவர் : மலர் (13-Dec-24, 9:03 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : pattap peru venum
பார்வை : 3

மேலே