ஏக்தா பிஸ்தா

ஏக்தா, பிஸ்தா

@@@@@@@@

ஏனுங்க நீங்க இந்திக்காரங்களா?

@@@@@@@@@@@@@

ஏன் கேக்கறீங்க?

@@@@@@@@@@

ஏக்தா, பிஸ்தானு சொன்னீங்களே!

@@@@@@@@@@

நாங்களும் உங்கள மாதிரி பச்சைத் தமிழர்கள் தான். நீங்க


உங்க பிள்ளைகளுக்குத் தமிழப் பேருங்களையா வச்சிருக்கிறீங்க?

@@@@@@@

தமிழர்கள் யாருமே அவுங்க பிள்ளைகளுக்குத் தமிழ்ப்

பேருங்களை வைக்கிறதில்லைங்கோ.


@@@@@@@@@@@

நீங்களும் எங்களை மாதிரி தான். நாமெல்லாம் தற்காலத்

தமிழர்கள். பெத்த பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பேரை வைக்கிறவங்க

தற்காலத்தில் வாழும் கற்காலத் தமிழர்கள். ..

@@@@@@@@@@@@

நல்லாச் சொன்னீங்க. சரி ஏக்தா, பிஸ்தா-னா என்னங்க?

@@@@@@@@@@@

ஏக்தா எங்க பொண்ணுப் பேரு. பிஸ்தா எங்க பையன் பேரு.

@@@@@@@@@@@@@

உங்க பொண்ணுப் பேரை யாரும் எகத்தாளமாச் சொல்லமுடியாது.

பையன் பேருக்குத் தகுந்த மாதிரி பெரிய பிஸ்தாவா வருவான்.

@@@@@@@@@@@@@@@@@@@@


ஆமாம் இந்தப் பேருங்களை வைக்கச் சொல்லி யாருங்க

உங்களுக்குச் சொன்னாங்க?

@@@@@@@@@@@@

நாங்களா வலைத்தளங்களில் தேடி கண்டுபிடிச்ச் பேருங்க.

@@@@@@@@@@@

அருமயான பேருங்க. சுவீட் நேம்சுங்க.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Ekta (एकता) =
To agree or ‘unity’ Feminine name

. Name Pista generally means 'Crowned ' is a Masculine (or Boy) name. Name Pista has Hungarian origin.

எழுதியவர் : மலர் (8-Dec-24, 7:33 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 23

மேலே