வழிகாட்டி என்றிடுவார் வாழும்வழி சொல்லிடுவார் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(காய் 4)
வழிகாட்டி என்றிடுவார்
..வாழு(ம்)வழி சொல்லிடுவார்;
உழைப்பாளி என்றிடுவார்
..உத்தமமாய் ஒன்றுரைப்பார்!
மழைக்காலம் வந்துவிட்டால்
..மழைவெள்ளம் அஞ்சிடுவார்;
கொழுகொம்பாய்ப் பற்றிடுவேன்
..கொண்டலன்ன அவர்கரமே!
- வ.க.கன்னியப்பன்