வெள்ளம் தந்த துயரம்

வெள்ளம் தந்த துயரம்

தமிழகம் புயல் தந்த மழைத் தண்ணீரில் தத்தளிக்க
தமிழ்நாட்டில் குடி வாழும் மக்கள் கண்ணீரில் கதறிட
தாயற்ற சேய்போல் வீட்டில் பல நெஞ்சங்கள் ஓலமிட
தரமில்லாத தண்ணீர் வடிவுக்கால் மக்களை தவிக்கச் செய்ய
இயற்கை செய்த இந்த கோரம் கண்ணால் காண முடியவில்லை
இத்துயரம் பார்க்க இயலாமல் உதவியும் செய்ய முடியாமல்
இனி இந்த இடர்கள் வர வேண்டாம் வேண்டாம்மென வேண்டி
இன்னலுற்ற மனங்கள் இன்புற வேண்டும் என இறையிடம்
இதயமுருக பிராத்தனை செய்து பரம்பொருளை வணங்கி
அவன் அருளால் அனைவரும் நலமடைய வேண்டிடுவோம்.

எழுதியவர் : கே என் ராம் (6-Dec-24, 9:09 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 12

மேலே