பாவம் கதறுகிறாள் காவேரி

காவேரியைத்தேடி காவேரி
கரை வந்தடைந்தேன்
அங்கு நீரால் மூடியிருந்த
கரையின் படிகள்
நீரற்று காய்ந்த படிகள்
நதியின் ஆழம் தெரிகிறது
ஆயின் காவிரியே, நீ எங்கு சென்றாய்
நடந்தாய் வாழி ! காவேரி
என்றல்லவோ வாழ்த்தினார்
புலவர் பெருமக்கள் அன்று

எங்கோ அசரீரி போல்
கேட்டதோர் குரல்
" நடந்து வந்தேன் புலவரே
ஆடி, அசைந்து, எழிலாய்..
ஐயோ என்னவென்பேன்,
வரும் வழியில் என்னை
அணைபோட்டு, கால்களை
கட்டிபோட்டுவிட்டனரே......
கதறுகிறேன் என் வழியே போக
என்னை விட்டுவிடு
எனக்காக என் சுற்றம் அங்கு
தென் தமிழ்நாட்டிலே காத்திருக்கு
என்றேன்" அதைக்கேட்டு இன்னும்
இறுக்கமாய் அல்லவோ என்னை கட்டிவிட்டார்கள்
என் செய்வேன், நீயே சொல்லு என்றது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Apr-18, 9:46 am)
பார்வை : 206

மேலே