த-சுரேஷ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : த-சுரேஷ் |
இடம் | : திருவில்லிபுத்தூர் |
பிறந்த தேதி | : 09-Dec-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 1615 |
புள்ளி | : 106 |
வாழ்க்கை என்ற கோட்டில் நான் மட்டும் தனியாய் ஓடிகொண்டிருக்கிறேன்..வெற்றி கோடுகளை அடைவேனா..! இல்லை வாழ்க்கையின் எல்லை கோடுகளை அடைவேனா...!..தெரியாமல்....
நீயோ!
மதுவுக்கு மயங்கி மகிழ்ச்சியில் தள்ளாடுகிறாய்...
தாயோ!
பசிக்கு மயங்கி வறுமையில் தள்ளாடுகிறாள்...
நீயோ!
போதைக்கு அடிமையாகி பணத்தை வாரி வாரி இறைக்கிறாய்...
மனைவியோ!
கூலிக்கு அடிமையாகி தோல் உரிய உரிய இழைக்கிறாள்...
நீயோ!
குடித்துக் குடித்து சொர்க்கத்தை கனவிலே காண்கிறாய்...
மகளோ!
விழித்து விழித்து நரகத்தை உன் கண்களிலே காண்கிறாள்...
நீயோ!
மது போதையில் உடலில் பலம்மின்றி சாக்கடையில் வீழ்ந்து கிடக்கிறாய்...
மகனோ!
பள்ளி போகையில் மனதில் பலமின்றி சாலையோரம் விழுந்து கிடக்கிறான்...
புத்தகப் பையேடு........
த.சுரேஷ்.
சாதி தீ
மதம் என்ற மலத்தை...
சாதி என்ற சாக்கடைக்குள்...
தீண்டாமை என்று திண்றுகொண்டும்...
உயர்ந்தவன் என்று ஊட்டிவிட்டும்...
தாழ்ந்தவன் என்று தன்னையே தாழ்த்திக்கொண்டும்...
அடுத்த தலைமுறைக்கு ஆணியடிக்கும்
இன்றைய தலைமுறையே...
விதைப்பதை நீ நிறுத்திவிட்டால் மட்டுமே போதும்...
சாதி என்ற தீயை அணைத்துவிடும்...
மதம் என்ற மகுடியை உடைத்தெறியும்...
இனம், மொழி, கடல் கடந்து
கைக்கோர்க்கும்....
அடுத்த தலைமுறை...
மனிதனாய்.....
-த.சுரேஷ்.
மௌனமாய் ஒரு
சிரிப்பு
மௌனமாய்
ஒரு அழுகை
மௌனமாய் ஒரு
சிந்தனை
மௌனமாய் ஒரு
வெற்றி
மௌனங்களில் ஒர்
அர்த்தம்
மௌனமாய் யோசியுங்கள்
மௌனத்தை
உணர்வீர்கள்.....
நான் கண்ட பெண்
பாரதி கண்ட புதுமை பெண்ணே
நானும் உன்னை கண்டேனடி...
காதல் என்ற ஆசையிலே
தானாய் நெருங்கி வந்தேனடி...
காதல் என்று சொல்லும் முன்னே
உன் விழியை நானும் கண்டேனடி...
என் காதல் என்ற காட்டுத்தீயை
உன் ஒற்றை பார்வையில் அணைத்தாயடி...
பாரதி கண்ட புதுமை பெண்ணென
காதலில் நானே மறந்தேனடி...
கையை பிடித்து இழுத்த நொடியே
என் ஒற்றை கன்னம் சிவந்ததடி...
Sorry... என்ற வருத்தம் வேண்டாம்...
காதல் என்ற புன்னகையே போதும்...
- த.சுரேஷ்.
ஆசிரியர் தின வாழ்த்துகள்
அன்று நீங்கள் அடித்த அடிகளால்
இன்று என் வாழ்க்கையே இனிக்கிறது....
இன்று அடிக்க ஆளில்லாமல்
வாழ்க்கையே வெறுமையனது....
வாழ்க்கையில் சிகரம் தொட்ட
அனைத்தது கால்களின்...
முதல் படி நீங்கள் தான்....
- த.சுரேஷ்.
காகிதமும் நனைகிறது
கவிதை எழுத மனமில்லை....
காரணம் ஏனோ தெரியவில்லை...
விரலும் சொல்ல மறுக்கிறது...
நினைவும் என்னை வெறுக்கிறது...
பேனா கூட அழுகிறது...
காகிதம் எல்லாம் நனைகிறது...
நனைந்த காகிதம் கேட்டகிறது....
கவலையில் கூட உன் கண்ணில் இருந்து கவிதை தானே சிந்தும்...
இன்று என்ன கண்ணீர் சிந்துகிறது என்று...?
த. சுரேஷ்.
உன் விழிகளை தருவாயா?
இவ்வவுலகை இரசிக்க இருவிழிகள் போதாது....
இன்னும் இருவிழிகளை தேடி அழைகிறேன்...
தேடுவதற்க்கே இந்த விழிகள் இப்படி இம்சிக்கின்றனவே....
இன்னும் இருவிழிகள் கிடைத்ததுவிட்டடால்....
அந்த விழிகளை இமைக்கவிடுமோ...
அல்ல
இந்த விழிகள் இமைக்கமறுக்ககுமோ...
- த.சுரேஷ்.
நண்பேன்டா
என் கல்லூரி வாழ்க்கையில் என்னை எழுதிய பேனா நீ தானடா...
திசை தெரியாமல் நின்ற என்னை கை பிடித்து கூட்டிச்சென்றாயடா...
பூக்களையும் இரசிக்க செய்தாய்...
வாழ்க்கையையும் யோசிக்க செய்தாய்..
தடைகளை கண்டு ஒதுங்கி சென்ற என்னை...
தடைகளை தட்டி உடைக்கவும் செய்தசெய்தாய்...
வேதங்கள் பல கற்க்க வழி நின்றாய்...
சோகங்களில் என்றுமே துணை நின்றாய்...
- த.சுரேஷ்.
நண்பன் ஜெனிலாரன்ஸ் உனக்கான ஒரு கவிதை
உன் விழியில் விழுந்தேனடி
ஒரு நிமிடம் உன் விழிகளை கண்டதற்கே எனக்கு தலையே சுற்றுதடி...
சென்ற பிறவியில் உன் விழிகளை கண்டதற்கா இந்த பூமி இன்னும் சுற்றிதிறியுதடி...
இந்த பிறவியில் உன் விழிகளை கண்டு திசை அறியாமல் நானும் சுற்றிதிறிகிறேனடி...
உன் விழிகளால் ஒரு வார்த்தை சொல்லி என்னை காப்பாற்றி நிற்கச்செய்யடி...
அன்பே உன் ஒரு வார்த்தைக்காக நான் இன்னும் எத்தனை பிறவி எடுக்க வேண்டும்...
என் உயிரே...
-த.சுரேஷ்.
உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள்
கார்ப்பரேட் கைக்கூலிக்கு அடிமையாய் உழைக்கும் என் இனமே மே தின நல்வாழ்த்துக்கள்...
சட்டத்தின் படி வாழத்தான் முடியுமா உன்னால்...
அல்லது
சட்டத்தின் படி வாழத்தான் விடுமா தன்னால்...
எட்டு மணி நேரம் மட்டுமே உழைக்கத்தான் முடியேமா உன்னால்...
அல்லது
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெறத்தான் முடியுமா தன்னால்...
போராடி குறைத்த மணித்துளிகள் வாதாடி அதிகரிக்கிறது...
வாதாடி அதிகரித்த ஊதியங்கள் போராடி குறைக்கப்படுகிறது...
உழைப்பவனுக்கு அல்ல உழைப்பாளர் தினம்...
உழைப்பாளியின் ஒற்றுமைக்கே உழைப்பாளர் தினம்...
- கார்ப்பரேட் அடிமை
த.சுரேஷ்
ஆசை
உலகமே இயங்குவதற்கு முழு காரணமே ஆசை...
உலகம் அழிவதற்கும் அதே காரணமே ஆசை...
இருப்பவனுக்கு இருக்கவேண்டாமென்ற ஆசை...
இல்லாதவனுக்கு இருக்கவேண்டுமென்ற ஆசை...
நிற்பவனுக்கு நடக்க ஆசை...
நடப்பவனுக்கு பறக்க ஆசை...
விதைக்கு விருச்சமாக ஆசை...
விருச்சத்திற்கு விதையாக ஆசை...
மனிதனின் ஆசை தீராத ஆசை...
கடவுளின் ஆசை தீர்க்க முடியாத ஆசை...
ஆசையை அடக்கவே ஆசை கொள்கிறான்...
ஆசையை அடையவும் பேராசை கொள்கிறான்...
அன்பான ஆசை உள்ளத்தை ஆள்கிறது...
ஆபத்தான ஆசை உன்னையே அழிக்கிறது...
- த.சுரேஷ்
நிலவொளியில் என்னவளே
அடிப்பெண்ணே நீ மறைந்திருப்பது
என்னை காண்பதற்கா...
இல்லை
என்னை கண்டதற்கா...
எந்த இருளில் நீ மறைந்தாலும்
உன்னை தேடி பிடிப்பேன்
எந்தன் வெண்ணிலவே...
நீ வீசும் ஒளிக்காற்று மயக்கி
என்னை ஈர்க்கச் செய்யுதடி
எந்தன் முழுநிலவே...
உன்னை காதலிக்க என்ன தவம் செய்தேனோ எந்நிலவே...
உன்னை கரம்பிடிக்க என் ஆயுளையும் பரிசலிப்பேன் என்னுயிரே...
என்னுள் கோடி ஆசைகள் மலந்தாலும்
உந்தன் ஒர் ஆசைக்கு நீரூற்ற
மனம் தவியாய் தவிக்குதடி...
- த.சுரேஷ்.
நண்பர்கள் (74)

மணி மேகநாதன்
சேலம்

பாலா தமிழ் கடவுள்
உங்களின் இதயத்தில்

இளவல்
மணப்பாடு

கோட்டீஸ்வரன்
வேலூர்
