உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள்

உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள்கார்ப்பரேட் கைக்கூலிக்கு அடிமையாய் உழைக்கும் என் இனமே மே தின நல்வாழ்த்துக்கள்...

சட்டத்தின் படி வாழத்தான் முடியுமா உன்னால்...
அல்லது
சட்டத்தின் படி வாழத்தான் விடுமா தன்னால்...

எட்டு மணி நேரம் மட்டுமே உழைக்கத்தான் முடியேமா உன்னால்...
அல்லது
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெறத்தான் முடியுமா தன்னால்...

போராடி குறைத்த மணித்துளிகள் வாதாடி அதிகரிக்கிறது...

வாதாடி அதிகரித்த ஊதியங்கள் போராடி குறைக்கப்படுகிறது...

உழைப்பவனுக்கு அல்ல உழைப்பாளர் தினம்...
உழைப்பாளியின் ஒற்றுமைக்கே உழைப்பாளர் தினம்...- கார்ப்பரேட் ‌‌‌‌‌‌அடிமை‌
த.சுரேஷ்

எழுதியவர் : சுரேஷ் (30-Apr-18, 6:32 pm)
சேர்த்தது : த-சுரேஷ்
பார்வை : 2515

மேலே