ஆசை

ஆசை


உலகமே இயங்குவதற்கு முழு காரணமே ஆசை...
உலகம் அழிவதற்கும் அதே காரணமே ஆசை...

இருப்பவனுக்கு இருக்கவேண்டாமென்ற ஆசை...
இல்லாதவனுக்கு இருக்கவேண்டுமென்ற ஆசை...

நிற்பவனுக்கு நடக்க ஆசை...
நடப்பவனுக்கு பறக்க ஆசை...

விதைக்கு விருச்சமாக ஆசை...
விருச்சத்திற்கு விதையாக ஆசை...

மனிதனின் ஆசை தீராத ஆசை...
கடவுளின் ஆசை தீர்க்க முடியாத ஆசை...

ஆசையை அடக்கவே ஆசை கொள்கிறான்...
ஆசையை அடையவும் பேராசை கொள்கிறான்...

அன்பான ஆசை உள்ளத்தை ஆள்கிறது...
ஆபத்தான ஆசை உன்னையே அழிக்கிறது...



- த.சுரேஷ்

எழுதியவர் : சுரேஷ் (30-Apr-18, 9:29 pm)
Tanglish : aasai
பார்வை : 4144

மேலே