உண்மை உழைப்பாளர்கள்

வியர்வைத்துளிகள் 
முத்துக்களாய் மினுக்கும்  உழைப்பாளர்களின்  நெற்றியில் வியர்த்து உதிரும்போது  

வியர்வையின் வாசம் 
பூக்களின் வாசத்தை விட மிக அதிகமாய் மணக்கும்  
உண்மை உழைப்பாளர்கள் உழைக்கும்போது   

அழுக்கு படித்திருந்தாலும் அழகானவர்கள்  
உடை கிழிந்திருந்தாலும் உயர்வானவர்கள் 

நம் மதிப்பிற்குரிய
மாண்புமிகு உழைப்பாளர்கள்

சுயமரியாதைக்கும்  தன்னம்பிக்கைக்கும்
பொருத்தமான 
பொறுப்பாளர்கள் 

இவர்கள் கைகள் நமக்காக உழைக்கட்டும்
நமது கைகள் அவர்களை  நோக்கி வணங்கட்டும் 

எழுதியவர் : சூரியன்வேதா (30-Apr-18, 11:59 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 132

மேலே