நம் பாசமிகு பாட்டாளி
![](https://eluthu.com/images/loading.gif)
உள்ளங்கை சிவந்திருக்கும்
அடிவயிறு சுருங்கியிருக்கும்
உழைப்பில் உண்மையிருக்கும்
உடல்முழுக்க வியர்த்திருக்கும்
கத்ரிவெயிலோ சூறாவளிபுயலோ
உறைபனியோ அடைமழையோ
எதற்கும் அஞ்சமாட்டான்
யாரிடமும்
கையேந்தி கெஞ்சமாட்டான்
தன் உழைப்பில் உணவு உண்ணுவான்நெஞ்சம்நிமிர்த்தி தான் ஒரு உழைப்பாளியென பெருமையாய் சொல்லுவான்
சோம்பேறியாய்
ஒரு நொடியும் இருக்கமாட்டான்
உழைக்காமல்
ஒரு இரவும் உறங்கமாட்டான்
நம் பாசமிகு பாட்டாளி
நம்முடன் கூடிவாழும் கூட்டாளி