கோட்டீஸ்வரன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/lquni_44351.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : கோட்டீஸ்வரன் |
இடம் | : வேலூர் |
பிறந்த தேதி | : 15-May-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-May-2018 |
பார்த்தவர்கள் | : 279 |
புள்ளி | : 5 |
தமிழ் மீது பற்று கொண்ட வேதியியல் பட்டதாரி....
வெள்ளிக் கம்பி கேசம்.
வெளுக்காத நேசம்.
வெகுளியாய் பேசும் -உன்
பேச்செல்லாம் பாசம் வீசும்.
ஒத்த ஏர்பூட்டி
தொத்த மாடு ரெண்டு கூட்டி
வெயிலுன்னு பாக்காம
ஒத்தையில நீ உழச்சதெல்லாம்
உனக்கா சொந்தம்..!!??
ஒத்தமகன் ஓடியாந்து மொத்தத்தையும் எடுத்துப் போரான்.
உன் இரத்தம் கூட மிச்சமில்ல
அத்தனையும் உறிஞ்சு போரான்.
பெத்த மக ஒருத்தி
இராசாத்தி பேரு வச்சு
இராணியாத்தான் வளத்தெடுத்து
அக்கா மகனுக்குதான் ஆசையா கட்டி வச்ச
அக்காவா இருந்தாலும் சம்பந்தி முறுக்கு வர
போட்டதெல்லாம் பத்தாது போடினு தொரத்திவிட
வருசத்துக்கு நாலு மொற உம்பிள்ள வாசல் வர.
பச்சோந்தி சொந்தமெல்லாம் பணத்துக்கு தான் ஓடி வரும
மகரந்தம் வேண்டி மலரைக் கசக்குவதே
யேற்புடையது அல்ல
ஏனோ இங்கே மொட்டும் கசக்க படுவதன்றி
கருக்கவும் படுகின்றது
பாலியல் வன்கொடுமை
- தினேஷ் ஏ
விழித்துக் கொள் மனிதா
மண் பானை நீரும்
மண் செட்டி சோறும்
மண் மணக்கும் நம்ம ஊரும்..
நினைவில் கொள்ளடா!
வாழையிலையில் பரிமாறி
வண்டி வண்டியாய் ஆவுக்கு
உணவு விடுவோம்.....
உணவையே மருந்தாக்கி
உடல் நலத்தை காத்திடுவோம்.....
கைவினைப் பொருள்களை பயன்படுத்தி பலர் குடும்பத்தை உயர்த்திடுவோம்.....
தேவையில்லாத பொருட்கள் நம் மண்ணை அழிக்காமல் பாதுகாப்போம்.......
நிலத்தடி நீரை காப்போம்
மக்கா பொருளை தவிர்த்திடுவோம் விழித்துக் கொள் மனிதா
உன் வாழ்க்கை உன் கையில்.......
நெகிழி:(Plastic)
அழும் குழந்தையின் பாலாடையை புறந்தள்ளி பால் புட்டியானது..........! நடை பழகும் குழந்தையின் கட்டை நடைவண்டியை walker வடிவில் விழுங்கியது..............! பால், தயிர், மளிகை, எண்ணெய், உணவு என எல்லாவற்றையும் தனக்குள் தாங்கி நிற்கும் நெகிழி, இன்று...... எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கின்றது, மண்ணையும், விண்ணையும் வீழ்த்தி, மக்களை மட்க வைக்கும், மட்காத நெகிழி தன்னை ஒதுக்க மனித மனம் மறுக்கின்றது.............!!!
நந்தவன காற்றுயென
சொந்தம் கொள்ள நீ யார்
எந்தவனம் நீ செய்தாய்
என்னைக் கொல்ல நீ யார்
வாயுக்கும் முறைவாசல்
செய்தவனம் நான் தான் -மனிதா
உன்தாய்க்கும் சுவாசம்
தந்தவனம் நான் தான்
பகலுக்கும் போர்வைப்
தந்தவனம் நான் தான்
முகிலுக்கும் தூது
விட்டவனம் நான் தான்
புயலுக்கும் தடையாய்
நின்றவனம் நான் தான்
புழுவுக்கும் குடையாய்
நின்றவனம் நான் தான்
நீரையும் நிற்கச்
செய்தவனம் நான் தான்
நிலத்தையும் சிறக்கச்
செய்தவனம் நான் தான்
நான் தான் நான் தான்
எல்லாமும் நான் தான் -இன்
மீன்-அவள்
புழுவாக மண்ணில் பூத்த என்னை கண்களால் தூண்டிலிட்டு விழுங்கிய மீன் அவள்..........!
இறந்தும், இரையாகி உன்னுள் உறையும் ஒருவன்.......!
மீனவள்
*************
காலையும் விடிஞ்சாச்சு..
வேலையும் வந்தாச்சு..
எனக்கு
வளையல் போட்ட மச்சான்
வலை எடுத்துப் போனான்..
என்
மீசைக்கார மச்சான்
மீன் பிடிக்கப் போனான்..
என்
பாசக்கார மச்சான்
படகோட்டிப் போனான்..
மூத்த பிள்ளை
என் வயிற்றில் இருக்க..
எனக்கு முத்தமிட்டுப்
போனான்..
கடலிலே அவன் மிதக்க..
கரையிலே நான் நிற்க..
என் கண்விட்டு
மறையும் வரை
கை அசைத்து
நின்றேன்..
கண்விட்டு விலகியதும்
கஞ்சி தண்ணி நான் குடிக்க
குடிசைக்குப் போனேன்..
இன்று கடலுக்குள்
யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்
வானொலியின் எச்சரிக்கை
என் காதில் விழ..
கலங்கித் தவிக்கிறேன்
அலைய
கா(கே)வலர்கள்:
ஆட்சியாளர்களுக்காக தன் காட்சிகளை மாற்றிக் கொள்ளும் மாக்கள்,
உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் உண்பவர்கள், பாதுகாக்க வேண்டிய மக்களை பரலோகம் அனுப்பிய பாவிகள்,
முத்துநகர் மக்களின் இதயங்களை கிழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரத்தத்தில் அபிஷேகம் செய்யும் அயோக்கியர்கள்,
வீதிக்கு வந்த எம்மக்களை குண்டுகளால் துளைத்த கோழைகள்,
இறகிருந்தால் என் மக்கள் பறந்திருக்கும்... குருவியென எம்குலத்தை சுட்டவனே.......... அம்மக்கள் தாக்கி ஒரு போலிஸ் சாகவில்லை.. பிறகு ஏன் சுடும் ஆனை இட்டாய் இழி பிறப்பு ஆட்சியரே... வானம் நோக்கி சுடவில்லை, காலை பார்த்து சுடவவுமில்லை..........
ஆளத் தெரியா ஆட்களிடம் ஆ
காவிரியில் தண்ணீர் வரும் என்று, கண்ணீருடன் காத்திருக்கும் கண்மணிகள்....
நீீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டது போன்று, கர்நாடக அணைகளின் கண்கள் கட்டப்பட்டுள்ளது... தேர்தல் என்ற கருந்துணியால்........
நண்பர்கள் (17)
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
தினேஷ் ஏ
Chennai
![முதல்பூ](https://eluthu.com/images/userthumbs/a/egvyz_7070.jpg)
முதல்பூ
வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
![ப சண்முகவேல்](https://eluthu.com/images/userthumbs/f3/exkws_37362.jpg)
ப சண்முகவேல்
தருமபுரி, காமலாபுரம்
![கல்லறை செல்வன்](https://eluthu.com/images/userthumbs/f2/fikyw_28664.jpg)
கல்லறை செல்வன்
சிதம்பரம்
![த-சுரேஷ்](https://eluthu.com/images/userthumbs/f4/mrhoi_43718.jpg)