தினேஷ் ஏ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தினேஷ் ஏ |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 17-Aug-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 670 |
புள்ளி | : 20 |
மான் விழி கொண்ட மாது
மது சுவை அறிய விழையும் மடந்தை
கண்ணாடியில் உன் பிம்பம் மட்டும் தான் காண்பாயோ
எனில் இன்று முதல் கூர்ந்து நோக்கு
உன் விழியிர்புவிசையினில் மிதந்தேனே
இந்த புவியிர்புவிசையினை மறந்தேனே
இதழோரம் சிந்தும் சிறு புன்னகையில்
காலம் மறந்து சொக்கி கிடப்பேனே
உன் சிறு பல் தெரியும் சிரிப்பு தரும் கிறக்கம்
நெடு மரம் இறக்கும் கல்லு தந்திடுமோ
அல்லது உலகையே மறக்கசெய்யும் உன் விழி தரும் போதையை
மேல்நாட்டு மதுவில் கிடைத்திடுமோ
தலைவன் தலைவிக்கு, நான்
சிறை புகுந்த, அந்த-
பிறை வயிற்றை கண்டனால் – முதல் காதல் கொண்டனர்
ஈரேழு வாரத்தின் முடிவில்
மீயொலி நோட்டம் சென்று
எந்தன் வளர்ச்சி கண்டனால் – முதல் காதல் வளர்த்தனர்
மகப்பேறு பல கண்ட
மருத்துவர் மத்தியில், மழலையாய்
அழுகுரல், இனிக்கும் நேரம் – முதல் காதல் பிறக்கும்
அன்றாட கேட்டறிந்த மொழிதான்!
ஆயினும், பிள்ளை அமுதாவாய்
திறந்து, அம்மா என்றது – முதல் காதல் அதிகரிக்கும்
தாய் தந்தை தள்ளி இருக்க
தவழும் நான் தனித்திருக்க
தமக்கை தாலாட்டும் அந்நேடி – முதல் காதல் வளரும்
காலைக் கவலையுடன் சென்றோம்
அதட்டும் ஆசிரியர் மத்தியில்
ஆறுதலாய் நட்பின் பிடியில் இருக்கும் நேரம் – முத
அறியாத அரிமாக்கள் மத்தியில் – இருக்கும்
அவளின் தனிமையை காட்டிலும்
தெரியாத தேவதைகள் மத்தியில் – இருக்கும்
அவனின் தனிமை கொடுமையானது
பிடித்தவர்கள் மத்தியில் பரிசாய் பெரும்
வேண்டாத தனிமை சாபம்
பக்குவமாய் புரிந்து நாமாக மனதார
ஏற்கும் தனிமை வரம்
முகஸ்துதி பாடும் முகமூடிகள் மத்தியில்
தேவைப்படும் தனிமை சொர்கம்
உதிரத்தை உணவாக்கி உயர்த்திய – அன்னை
பிரிவின் தனிமை நரகம்
அன்பு அரவணைப்பு அறம் தந்த – அப்பா
பிரிவின் தனிமை பாடம்
இடைவெளியின்றி இணைந்த கைகள் – பிரிந்தபின்
வாழ்வின் தனிமை வெறுமை
தனித்தே பிறந்து தனித்தே இறக்கும்
அற்ப வாழ்வில் தன்னிலை உணர்த்தும்
இந்தத் தனிமை என்றுமே பெருமை
பற்றற்று தறிகெட்டு திரிந்தால் பெற்றவன் மீது பழிவந்து சேரும் என்பர்
பட்டாளத்தில் சேர்ந்து பாசம்மறந்து என் பிள்ளையை விடுத்து இத்தேசத்தைக் காக்கும் தாயுமானவன் நான்
அடித்தாலும் அரவணைத்தாலும் அண்ணையை மிஞ்ச ஆள் இல்லை
ஆயினும் அவளை விடுத்தது இவளையே பெரிதென எண்ணிப் பேணிக்காக்க வந்தவன் நான்
கை பிடித்துக் கட்டியணைத்து காத்தோரும் காதல் மொழி பேச நேரம் இன்றி
என் தாய் திருமண்ணின் மானத்தைப் போற்றி பாதுகாத்திட பாடுபடுபவன் நான்
பிஞ்சு கரம் பிடித்து மழலை குரல் கேட்டுத் தண்டு கால்களினால் மிதிவங்க காலம் இன்றி
நஞ்சு கத்தி ஏந்தி மார்பில் தோட்டா மாலையுடன் கையெரிகுண்டின் தாக்குதலில் நித்தமும் ரத்தம் சிந்த சி
காதல் வாழும் உள்ளத்தில்
காமன் ஆட்கொண்டாள் அன்று
விளைவு
காதல் முடித்தறித்து ஆளும்
இல்லை உயிர்துறந்து விழும்
உடையவனோடு உடல் சேர்ந்து
உணர்ச்சியின் உன்னதம் எய்தி
உயிர் நீரை உள்வாங்கி
கொண்டவனின் காதல் பரிசை
குளவிளக்கே உன்னை கருவாய் சுமந்து
கடல் அலை நுறையென காலம் கரைய
கண்ணே என் கருவில் நீ வளர
கர்ப்பணையில் நான் உன்னை வரைய
அசைவ பிரியர் நாசி தொட்ட உணவு வாசம்
தரும் அதிருப்தி போலும்
இயந்திரம் ஆய்வில் உன் இருதயத்தின்
இசையில் என் விழி மலர்ந்தது
கருவறை எனும் சிறைதனிலே
காதலுடன் காத்திருப்பேன்
கிழிக்கும் ஒவ்வொரு தேதியிலும்
உன் விடுதலையை நெருங்கிடுவென்
தும்பை பூ வெண்மையோ அல்ல
கோகுல கண்ணனின் கருமையோ அறியாது
உன்னை சிந்தையால் காணும் நேரமெல்லாம்
என் கண்ணுக்கு மழை மேகம் தரும்
வானவில்லாய் விருந்தலிப்ப
இஈரெட்டு வாரத்தில் கேட்பதையெல்லாம் இசையாக
என்னவளின் இதயத்தின் இசையில் நான் மிதந்திட
நாலாறு வாரத்தில் அவள் அடிமடி என்னும் மேடையில்
என் முதல் அரங்கேற்றம்
உன் உலகிற்கு ஆம் உன்னவனுக்கு மட்டும்
உணர்ந்து மகிழிந்திட தந்தாயே
உன் உணர்வைப் பதிவேற்றம்
அவதரித்த அந்நாளே சங்கீத சாரீரத்துடன்
கால்கள் போட்டதுவே விடுதலை ஆட்டம்
ஆகா சிறந்த நடனர் தான் அனைவரும்
ஜனிக்கையிலும் பிறக்கையிலும்
காலப் போக்கில் மறந்திடுவார் பலரும்
வாழ்க்கையிலே வளர்கையிலே
ஜதிகள் சொல்ல கால்கள் ஆடும் பரதம்
உடலில் மெல்ல உற்று எடுக்கும் புரதம்
விதியின் சதியில் உயிரும் இங்கே சாகும்
சிதையின் பின்னே குத்தாட்டம் அங்க
மகரந்தம் வேண்டி மலரைக் கசக்குவதே
யேற்புடையது அல்ல
ஏனோ இங்கே மொட்டும் கசக்க படுவதன்றி
கருக்கவும் படுகின்றது
பாலியல் வன்கொடுமை
- தினேஷ் ஏ