இராணுவ வீரன்

பற்றற்று தறிகெட்டு திரிந்தால் பெற்றவன் மீது பழிவந்து சேரும் என்பர்
பட்டாளத்தில் சேர்ந்து பாசம்மறந்து என் பிள்ளையை விடுத்து இத்தேசத்தைக் காக்கும் தாயுமானவன் நான்
அடித்தாலும் அரவணைத்தாலும் அண்ணையை மிஞ்ச ஆள் இல்லை
ஆயினும் அவளை விடுத்தது இவளையே பெரிதென எண்ணிப் பேணிக்காக்க வந்தவன் நான்
கை பிடித்துக் கட்டியணைத்து காத்தோரும் காதல் மொழி பேச நேரம் இன்றி
என் தாய் திருமண்ணின் மானத்தைப் போற்றி பாதுகாத்திட பாடுபடுபவன் நான்
பிஞ்சு கரம் பிடித்து மழலை குரல் கேட்டுத் தண்டு கால்களினால் மிதிவங்க காலம் இன்றி
நஞ்சு கத்தி ஏந்தி மார்பில் தோட்டா மாலையுடன் கையெரிகுண்டின் தாக்குதலில் நித்தமும் ரத்தம் சிந்த சித்தமாய் இருப்பவனும் நான்
நாட்டைக் காக்க வீட்டை மறந்து காடுகாடாய் திறிந்தாலும்
மக்களைக் காக்க என் மழலையை மறந்து மலையாய் சுற்றினாலும்
கார்கில்லை காக்கக் காதலை மறந்து காமனையே எரித்தாலும்
என்றும் நீ வாழ நான் வீழ்வேன் என்றால் அது தற்பெருமை ஆகும்
நீ வீழாமல் இருக்க நித்தமும் நான் வாழ்வேன் என்பதே பெருமை
அன்னையர் தினம் ஆசையாக மட்டும்
காதலர் தினம் கனவாக மட்டும்
குழந்தைகள் தினம் குமுறலோடு மட்டும்
பிறந்த தினம் பிரதிஏடுகளிள் மட்டும்
இருந்த எங்களுக்கு
உற்றார் உறவினரை விடுத்து
உறுதி கொடுக்கும் தோழர்களுடன் இனிதாய் செலவிட ஒரு நண்பர்கள் தினமும்
எதிரி நாடாய் இருப்பினும் எல்லையில் எத்திரில் இருக்கும் நண்பனோடு பகிர்ந்து கொண்டாடச் சுதந்திர தினமும் தந்த
இந்த ஆகஹ்டு மாதத்தை
ஆயிரம் கரம் கொண்டு வணங்கும் அன்பு வீரர்கள்

எழுதியவர் : - தினேஷ் ஏ (20-Aug-18, 4:42 pm)
சேர்த்தது : தினேஷ் ஏ
Tanglish : iraanuva veeran
பார்வை : 833

மேலே