முதல் காதல்

தலைவன் தலைவிக்கு, நான்
சிறை புகுந்த, அந்த-
பிறை வயிற்றை கண்டனால் – முதல் காதல் கொண்டனர்
ஈரேழு வாரத்தின் முடிவில்
மீயொலி நோட்டம் சென்று
எந்தன் வளர்ச்சி கண்டனால் – முதல் காதல் வளர்த்தனர்
மகப்பேறு பல கண்ட
மருத்துவர் மத்தியில், மழலையாய்
அழுகுரல், இனிக்கும் நேரம் – முதல் காதல் பிறக்கும்
அன்றாட கேட்டறிந்த மொழிதான்!
ஆயினும், பிள்ளை அமுதாவாய்
திறந்து, அம்மா என்றது – முதல் காதல் அதிகரிக்கும்
தாய் தந்தை தள்ளி இருக்க
தவழும் நான் தனித்திருக்க
தமக்கை தாலாட்டும் அந்நேடி – முதல் காதல் வளரும்
காலைக் கவலையுடன் சென்றோம்
அதட்டும் ஆசிரியர் மத்தியில்
ஆறுதலாய் நட்பின் பிடியில் இருக்கும் நேரம் – முதல் காதல் பிறந்தது
பருக்கள் தோன்றும் பருவம்!
தேவதை போன்ற உருவம்!
ஓரக்கண்ணால் பார்த்த நொடி – முதல் காதல் அறிந்தேன்
கனவைச் சேர்த்து வைத்து
கண்ணியவள் கரம் பிடித்து
வேள்வியை வலம்வந்த அந்நேரம் – முதல் காதல் உணர்ந்தேன்
என்னிடம் கேட்டனர், இங்கே-
எது, முதல் காதல் என்று
நான் அறிந்தவை கொண்டு
எது முதல் காதல் என்று
எடுத்துரைத்தேன், இனிக்கும் எம்மொழி
உமக்கு விளக்கும் அந்நேரம் – முதல் காதல் சிரக்கும்.

எழுதியவர் : - தினேஷ் ஏ (22-Aug-18, 4:59 pm)
சேர்த்தது : தினேஷ் ஏ
Tanglish : muthal kaadhal
பார்வை : 310

மேலே