நடனம்
இஈரெட்டு வாரத்தில் கேட்பதையெல்லாம் இசையாக
என்னவளின் இதயத்தின் இசையில் நான் மிதந்திட
நாலாறு வாரத்தில் அவள் அடிமடி என்னும் மேடையில்
என் முதல் அரங்கேற்றம்
உன் உலகிற்கு ஆம் உன்னவனுக்கு மட்டும்
உணர்ந்து மகிழிந்திட தந்தாயே
உன் உணர்வைப் பதிவேற்றம்
அவதரித்த அந்நாளே சங்கீத சாரீரத்துடன்
கால்கள் போட்டதுவே விடுதலை ஆட்டம்
ஆகா சிறந்த நடனர் தான் அனைவரும்
ஜனிக்கையிலும் பிறக்கையிலும்
காலப் போக்கில் மறந்திடுவார் பலரும்
வாழ்க்கையிலே வளர்கையிலே
ஜதிகள் சொல்ல கால்கள் ஆடும் பரதம்
உடலில் மெல்ல உற்று எடுக்கும் புரதம்
விதியின் சதியில் உயிரும் இங்கே சாகும்
சிதையின் பின்னே குத்தாட்டம் அங்கே போகும்
திருவிழா சிறக்க உறுமியும் அங்கு மீட்ட
கிராமிய கலையின் பெருமையும் கலைஞர்கள் காட்ட
இடத்துக்கு இடம் எனக்குப் பெயர்கள் சற்றே மாறும்
ஆடும் நேரமெல்லாம் மன வலிகள் இங்கே ஆறும்
தனித்து ஆடினாலும் ஏன் தனிமையில் ஆடினாலும்
அழிக்க முடியாது இதன் வம்சத்தை
ஆடும் அனைவரும் கொண்டது அந்த
ஆதியோகியின் அம்சத்தை
தில்லையில் ஊன்றி இருக்கும் நடராஜன் சிலை
அது கூறும்
எல்லையே இன்றி பெருகும் உன்னத கலை
புவியினில் முத்த கலைஞன் கொண்டிருப்பான் மூன்றாம் விழி
மெய்வருத்தி வரும் ஆட்டம் கலையின் அழியா மொழி
- தினேஷ் ஏ