தென்றலிலே தேனெடுத்து தேரோட்டி வந்தவளின் தேனருவி மேனியிலே திகட்டாமல்...
தென்றலிலே தேனெடுத்து
தேரோட்டி வந்தவளின்
தேனருவி மேனியிலே
திகட்டாமல் குளித்திருந்தேன்
ஆகாச மின்னலென
அங்கங்கள் நனைத்திருக்க
பாலாடை பளபளக்கும்
பூவாடை மேனியிலே
மேலாடை சரிந்திருக்க மோகத்தில் சாய்த்திருந்தேன்
பாராத விழியிரண்டால் பார்த்துவிட்டு தலைகுனிந்தேன்
வெட்கத்தில் அவளிருக்க
வெடிசிரிப்பில் நானிருக்க
சிவன்மலை தென்றலவள்
சிரித்துவிட்டு போககண்டேன்
கன்னிப்பூ தோப்பினிலே
கனியிரண்டை கண்டதிலே
நான்மறந்தேன் என்றனையே
நாணத்தில் தலைகுனிந்தவளால்
கண்ணாடி வளையலுந்தான் கையோடு கலகலக்க
என்னோட கையிரண்டும் இழுத்தணைக்க மெய்சிலிர்த்தேன்
கைநிறையப் பூவெடுத்து
கூந்தலிலே சூடிவைத்து காற்றான அவளழகை
காதலித்தேன் தென்றலென