எண்ணம்
(Eluthu Ennam)
அவளுக்கு என்னை பிடிக்குமாம் ஆனால் என் மீது காதல் இல்லையாம்
என்னுடன் பயின்றவள் என்ற உறவுமுறை மட்டுமே அவளுக்கும் எனக்கும்
அவளிடம் நான் பேசியதே இல்லை அவளின் அருகில் தெரியாமல் கூட அமர்ந்ததில்லை
அவளின் பெயர் மட்டும் நன்றாக தெரியும் எனக்கு - ஆனால்
ஒருமுறை கூட அவளின் பெயரை உச்சரித்ததே இல்லை
கல்லூரியில் என்னை கண்காணிப்பாளாம்
கல்லூரியில் என்னை கண்ட உடனே எனக்கு பிடித்தவன் வந்து விட்டான் என்று அவளின் நண்பர்களிடம் கூறி மகிழ்வாளாம்
கல்லூரி முடியும் வரை என்னுடன் அவள் பேசியதே இல்லை
நானும் அவளுடன் பேசியதே இல்லை கல்லூரி முடிந்த பிறகு இடையில் ஒரு நாள் எதிர்பாராத சந்திப்பு அதில் வெறும் நலம் விசாரிப்பு மட்டுமே
பதினைந்து ஆண்டுகள் கழித்து சொன்னாலள் உன்னை பார்த்ததிலிருந்து எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சற்றென்று கூறிவிட்டால் அது காதல் கிடையாது ஆனால் உன்னை எனக்கு பிடிக்கும் என்று
அவள் காதல் கிடையாது என்றதும் என்னுள் அவள் மீது காதல் வந்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது எனக்கு
அலங்கார தேகம் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
சிங்காரம் கொண்ட மங்கை
செவ்விதழ் தேனை சிந்த
கொண்டாடும் கண்கள் இரண்டும்
குற்றாலச் சாரல் கொட்டும்
வாடாத மலரை போலும்
விழிநோக்கும் மங்கை என்பால்
தேடாத பார்வை நூலால்
தோகையாள் தேகம் துள்ள
இதழோரம் சொட்டும் தேனோ
இதழ்க்காட்டு மங்கை தானோ
பசுந்தங்கம் மேனி யெல்லாம்
பருவங்கள் பொங்கும் வேளை
தேனுண்ட வண்டாய் வாவா
தேவியென் முல்லைப் பூவில்
உன்மேலே ஆடும் மங்கை
உறவாடும் இன்ப கங்கை
தேனாறு பாய்ச்சும் என்பால்
தேரோட்ட வாவா அத்தான்
காதலை பெற்றேன் நானே, கண்விழி இமையாய்க் காத்தேன்!!கரும்பினில் சாற்றைப்... (Selvam)
20-Jul-2025 6:54 am
காதலை பெற்றேன் நானே,
கண்விழி இமையாய்க் காத்தேன்!!
கரும்பினில் சாற்றைப் போலக்
காதலின் இனிமை கண்டேன்!!
காதலை பலவும் கற்க,
கன்னியின் பின்னே சென்று
நெருப்பினில் விட்டில் போல
நானங்கே வீழ்ந்து போனேன்
உருவினில் பெண்மை என்னை
உணர்வினில் இழுத்து தள்ள
தருவினை வெட்டும் அந்தத்
தகவிலாக் கருவி யானேன்
மங்கையின் செய்கை யாலே,
. மனதையே வதைத்தார் நித்தம்!!
உருப்படி. யாக வில்லை
உருக்குலை ஆன துள்ளம்!!
அழகியின் வனத்தி னுள்ளே,
அலைந்திடும் குருடன் நானே!
அலைந்திடும் மனதில் இன்னல்,
ஆடியில் அமிலத் தூறல்,
தேகத்தை நனைக்க என்றன்,
தூவுதே உன்பார்வை சாரல்
பேசவும் இயலாக் கண்கள்
பேசுதே உந்தன் நெஞ்சில்
ஆசையென் மனத்திற் குள்ளே,
அணைத்திடும் அழகாம் உன்பால்
கடலலை மேலே நீந்தும்
கயல்விழி போலுள் லானேன்
ஆடியின் காற்றில் நீந்தும்,
அலைகிற சருகும் நானோ?
கன்னியில் ஏறும் நெஞ்சம்
கணினியில் காதல் கொள்ள
தோகையாள் அழகைத் தேடி
தேடினேன் கனவில் எங்கும்!!
காற்றினில் கலக்கும் மூச்சாய்
கற்பனையில் கலந்த தென்ன?
உந்தன் நிழல்
உன்னோடு ஒரு நாளாவது உன் நிழலாக வாழ வேண்டுடி
நீயும் நானும் சேர்ந்து கை கோர்த்து
உலகத்தை ரசிக்க
நான் ரசித்த புடவையின் மடிப்புகளை ஆராய
என்னை காக்க வைத்த
கணத்த இதயத்தை காண
ஓவ்வொரு நாழிகையும் நகையாடிய
புன்னகையை புரிந்து கொள்ள
உன்னோடு ஒரு நாளாவது உன் நிழலாக வாழ வேண்டுடி
உன் வியர்வை துளிகள் வெல்லமென எறும்பின் வாக்கின்படி சுவைத்து பார்க்க
உன் அங்கத்தில் தேடுகிறேன் என் வாழ்நாளை
இது கனவாக இருக்காது கணவனாக மாறுவதற்கு சில காலம்
நிழலாக நினைக்காதே நிஜத்தில் நிற்பேன் திருமண கோலத்தில் உன்னுடன்
உன்னோடு ஒரு நாளாவது உன் நிழலாக வாழ வேண்டுடி
தென்றலிலே தேனெடுத்துதேரோட்டி வந்தவளின் தேனருவி மேனியிலேதிகட்டாமல் குளித்திருந்தேன்ஆகாச மின்னலென... (Selvam)
26-Nov-2024 3:44 am
தென்றலிலே தேனெடுத்து
தேரோட்டி வந்தவளின்
தேனருவி மேனியிலே
திகட்டாமல் குளித்திருந்தேன்
ஆகாச மின்னலென
அங்கங்கள் நனைத்திருக்க
பாலாடை பளபளக்கும்
பூவாடை மேனியிலே
மேலாடை சரிந்திருக்க மோகத்தில் சாய்த்திருந்தேன்
பாராத விழியிரண்டால் பார்த்துவிட்டு தலைகுனிந்தேன்
வெட்கத்தில் அவளிருக்க
வெடிசிரிப்பில் நானிருக்க
சிவன்மலை தென்றலவள்
சிரித்துவிட்டு போககண்டேன்
கன்னிப்பூ தோப்பினிலே
கனியிரண்டை கண்டதிலே
நான்மறந்தேன் என்றனையே
நாணத்தில் தலைகுனிந்தவளால்
கண்ணாடி வளையலுந்தான் கையோடு கலகலக்க
என்னோட கையிரண்டும் இழுத்தணைக்க மெய்சிலிர்த்தேன்
கைநிறையப் பூவெடுத்து
கூந்தலிலே சூடிவைத்து காற்றான அவளழகை
காதலித்தேன் தென்றலென
மேலும்...