எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அலங்கார தேகம் கண்டு ஆடாத மனமும் உண்டோ சிங்காரம்...

அலங்கார தேகம் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
சிங்காரம் கொண்ட மங்கை
செவ்விதழ் தேனை சிந்த 

 கொண்டாடும் கண்கள் இரண்டும்
குற்றாலச் சாரல் கொட்டும் 
வாடாத மலரை போலும்
விழிநோக்கும் மங்கை என்பால் 

தேடாத பார்வை நூலால் 
தோகையாள் தேகம் துள்ள 
இதழோரம் சொட்டும் தேனோ 
இதழ்க்காட்டு மங்கை தானோ 

பசுந்தங்கம் மேனி யெல்லாம் 
பருவங்கள்  பொங்கும் வேளை
தேனுண்ட வண்டாய் வாவா
தேவியென் முல்லைப் பூவில் 

உன்மேலே  ஆடும் மங்கை
உறவாடும் இன்ப கங்கை 
தேனாறு பாய்ச்சும் என்பால்
தேரோட்ட வாவா அத்தான்

பதிவு : Selvam
நாள் : 20-Jul-25, 6:59 am

மேலே